கட்சித் தலைமையில் ஆட்சித் தலைமையில் இருப்பவர்கள் எந்த வகையிலும் தலையிட மாட்டார்கள். நல்ல தலைவர்களைக் கொண்ட மாற்று அரசியலைக்கொண்டு வர விரும்புகிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

 தனது அரசியல் திட்டம் குறித்து சென்னையில் இன்று வியாழக்கிழமை நடிகர் ரஜினிகாந்த் ஊடகவியலாளரை சந்தித்தார்.

இதன்போது அவர் தனது அரசியல் திட்டங்கள் குறித்து அறிவித்தார். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த தான் மூன்று திட்டங்களை வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

முதலில் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதுவே. அதன்படி மூன்று திட்டங்களில் ஒன்று, கட்சியில் குறிப்பிட்ட அளவிலேயே தலைவர் பதவிகள். இரண்டாவது, அதிக அளவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு. மூன்றாவது ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு வாய்ப்பு அளிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சியில் பதவிகள் நிரந்தரமாக இருக்காது. கட்சித் தலைமையில் ஆட்சித் தலைமையில் இருப்பவர்கள் எந்த வகையிலும் தலையிட மாட்டார்கள். நல்ல தலைவர்களைக் கொண்ட மாற்று அரசியலைக்கொண்டு வர விரும்புகிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.