கண்டி, கலாபொக்க, அபிராமி தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுக்கூடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 15 ஆம் திகதி காலை  9 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஒன்றுக்கூடல் நிகழ்வில் சகல பழைய மாணவ மாணவியர்களும் கலந்துகொள்ளுமாறு சங்கத்தின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கல்வி பொதுத்தராதர சாதாரண தரம், உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான முன்னோடி செயலமர்வுகள், கற்றல் கற்பித்தல் மேம்பாட்டு வேலைத்திட்டம் பாடசாலை சுற்றுச் சூழலை அழகுப்படுத்தும் வேலைத்திட்டம், பாடசாலை கோவில் கும்பாபிசேகம் மற்றும் அபிராமி பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட்டு சுற்றுப் போட்டி போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த ஒன்றுக்கூடலில் கலந்துரையாடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.