சு .க  பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் பொதுஜன பெரமுனவிற்கு  எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது : செஹான் 

Published By: R. Kalaichelvan

12 Mar, 2020 | 03:58 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுந்திர கட்சி பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட்டால். பொதுஜன பெரமுனவிற்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது ,  தனித்து செல்வதற்கு முன்னர் 2018ம் ஆண்டு இடம் பெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெறுபேற்றினை சுதந்திர  கட்சி மீட்டுப்பார்க்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பிரச்சினைகளை தோற்றுவிக்கும் விதத்தில் கருத்துரைக்கும் சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகவே  எந்நிலையிலும் அவதானமாகவே செயற்படுவோம். எனவும் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின்  தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் பொதுஜன பெரமுன கூட்டணியின் ஊடாகவே ஒன்றினைந்துள்ளது. அனைத்து தரப்பினரையும் ஒன்றுப்படுத்தி பலமான அரசாங்கத்தை தோற்றுவிப்பதே பிரதான  எதிர்பார்ப்பு. பலமான அரசாங்கம் இதுவரையில் தோற்றம் பெறாமையும் பொருளாதார ரீதியில் நாடு பின்னடைவதற்கு ஒரு  காரணியாக  உள்ளது.

கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும்  பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு முழுமையான  ஒத்துழைப்பினை வழங்குகின்றார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கூட்டணியில் இணைந்திருந்தாலும் இன்றும் முரண்பாடான  கருத்துக்களை மாத்திரம் தெரிவித்து வருகின்றார்கள்.   பொதுத்தேர்தலில் சுதந்திர கட்சி  தனித்து போட்டியிட போவாகவும்   அக்கட்சியின்  ஒரு  தரப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள். தேர்தலில் இவர்கள்  தனித்து போட்டியிடுவதால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் கிடைக்கப் பெறவுள்ள வெற்றியில் ஏற்படாது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59