(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக 86 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் கொழும்பில் 4, கம்பஹாவில் 4, களுத்துறை 5, கண்டி 4, மாத்தளை2, நுவரெலியா1, காலி 4, மாத்தறை 1, அம்பாந்தோட்டை 3, யாழ்ப்பாணம் 14, வன்னி10 , மட்டக்களப்பு 8, திகாமடுல்ல 5, திருகோணமலை 6, குருணாகலை 1, புத்தளம் 5, அனுராதபுரம் 2, பதுளை 3, மொனராகலை 1, இரத்தினபுரி1,மற்றும் கேகாலையில் 2 என மொத்தமாக 86 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. 

இதில் பொலன்னறுவை மாவட்டத்தில் எந்தவொரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தவில்லை என்பதுடன் யாழ். மாவட்டத்திலே அதிகூடுதலான 14 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.