உலகை அச்­சு­றுத்­தி­வரும்  கொரோனா வைரஸ் தொற்­று­நோயின் தாக்கம்   நாளுக்கு நாள்   உலகின் பல்­வேறு  பாகங்­க­ளிலும் அதி­க­ரித்து வரு­கின்ற சூழலில் இலங்­கையில் முத­லா­வது இலங்­கையர் ஒரு­வ­ருக்கு கொரோனா தொற்று நோய் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. 52 வய­தான   சுற்­றுலா வழி­காட்­டி­யாகத்  தொழில் புரியும்  ஒரு­வ­ருக்கே     இந்த கொரோனா தொற்று தொற்­றி­யுள்­ளமை  கண்­டு­பி­டிக்­கப்­பட்டு   ஐ.டி.எச்.  மருத்­து­வ­ம­னையில்  தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட   சிகிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்றார்.

நேற்று முன்­தினம் 10ஆம் திகதி இரவே இவ­ருக்கு கொரோனா  தொற்­றி­யி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.   இத்­தா­லியில் இருந்து வருகை தந்­தி­ருந்த  சுற்­றுலாப் பய­ணிகள் குழு­வொன்­றுக்கே  இவர் சுற்­றுலா வழி­காட்­டி­யாக  செயற்­பட்­டி­ருக்­கின்றார்.  அந்­த­வ­கையில் தற்­போது அந்த  சுற்­றுலா குழு­வினர்  பயணம் செய்த இடங்கள், அவர்கள்   சந்­தித்து  பேசிய, பழ­கிய மக்கள்  தொடர்­பான தக­வல்கள்  தேடப்­பட்டு வரு­வ­தா­கவும் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்றும் ஜனா­தி­பதி செய­லகம் அறி­வித்­தி­ருக்­கி­றது.

அது­மட்­டு­மன்றி இலங்­கையில் கொரோனா வைரஸ்  பர­வு­வதைத் தடுப்­ப­தற்கு சுகா­தார அமைச்­சினால் பல்­வேறு பரந்­து­பட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்  எனவே  இந்த  கொரோனா வைரஸ் பர­வலை முறி­ய­டிப்­ப­தற்கு   வழங்­கப்­பட்ட அறி­வு­றுத்­தல்­களைக் கடைப்­பி­டித்து ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு ஜனா­தி­பதி செய­லகம் நாட்டு  மக்­க­ளிடம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கி­றது.

தற்­போ­தைய நிலை­மையில்  இத்­தாலி,  தென்­கொ­ரியா, ஈரான்  ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து வரு­கின்ற  அனைத்து பய­ணி­க­ளையும்   தனி­மைப்­ப­டுத்தி கண்­கா­ணிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள்  எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்    ஜனா­தி­பதி செய­லகம் அறி­வித்­தி­ருக்­கி­றது.

 மிக முக்­கி­ய­மாகக்  கொரோனா வைரஸ் தொற்று பர­வலை தடுப்­ப­தற்கு அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு நாட்டு மக்­க­ளிடம்   கேட்­டுக்­கொள்­வ­தாக    கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.  

பதற்றம் வேண்டாம்
இந்த நிலையில்  நாட்டு மக்கள்   பதற்­ற­ம­டை­யாமல்  இந்த நோய் பர­வு­வ­தனை தடுப்­ப­தற்­காக சுகா­தார அமைச்­சினால் வெ ளியி­டப்­பட்­டுள்ள  ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட  அறி­வு­றுத்­தல்­களை பின்­பற்­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.  இந்த நோய்க்­கான அறி­கு­றிகள் தென்­படும் பட்­சத்தில் உட­ன­டி­யாக மருத்­து­வரை நாடி பரி­சோ­தனை செய்­து­கொள்­வது  சிறந்­த­தாகும். அது­மட்­டு­மன்றி இந்த நோய் பர­வாமல் இருப்­ப­தற்கு   தேவை­யான   முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை  எடுப்­பதும் இங்கு மிக அவ­சி­ய­மா­கின்­றது.

முதலில்  இந்த கொரோனா வைரஸ் தொற்­றுநோய் எவ்­வாறு பர­வு­கின்­றது என்­பது தொடர்பில் மக்கள் மிகவும்  தெளி­வு­டனும் விழிப்­பு­டனும் இருக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். பல்­வேறு வழி­களில்  இந்த வைரஸ் தொற்று  பர­வு­வ­தாக     அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.  முதலில் இந்த வைரஸ் தொற்­றா­னது சீனாவில் வுஹான்  மாநி­லத்தில் மிரு­க­மொன்­றி­லி­ருந்தே  மனி­த­ருக்கு பர­வி­ய­தாகக்    கண்­ட­றி­யப்­பட்­டது. அதன்­பின்னர் தற்­போது இந்த வைரஸ் தொற்று  மனி­த­னி­லி­ருந்து மனி­த­னுக்கு பர­விக்­கொண்­டி­ருப்­ப­துடன் நவீன உலகின்  நெருங்­கிய  தொடர்­புகள் கார­ண­மாக  உல­கெங்கும் பர­விக்­கொண்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

இத்­தாலி, ஈரான், தென்­கொ­ரியா
உலக நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில் இத்­தாலி, தென்­கொ­ரியா, ஈரான் ஆகிய நாடு­களில்  மிக  மோச­மான  முறையில் இந்­த­ வைரஸ் தொற்று பர­வு­வதைக் காண­மு­டி­கின்­றது. அதே­போன்று  அமெ­ரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் போன்ற நாடு­க­ளிலும்  கொரோனா வைரஸின் தாக்கம்  அதி­க­ரித்து வரு­வதைக் காண முடி­கின்­றது. எனினும்  இத்­தாலி, தென்­கொ­ரியா, ஈரான்   ஆகிய நாடு­களில்  கொரோனா வைரஸின் தாக்கம் அதி­க­மாக இருப்­பதன் கார­ண­மா­கவே   அந்­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­கின்ற பய­ணி­களை 14 நாட்கள்  தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் தீர்­மானம் எடுத்­தி­ருக்­கி­றது.  

அதன்­படி   மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் அமைந்­துள்ள பற்றிக்­களோ கம்பஸ் என்ற   கட்­டி­டத்­தொ­கு­தி­யிலும்   கந்தக்காடு என்ற பகு­தி­யிலும் இவ்­வாறு   இந்த மூன்று நாடு­க­ளி­லி­ருந்து வரு­கின்ற பய­ணி­களை 14 நாட்கள் தனி­மைப்­ப­டுத்தி வைப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றது. இந்த   கொரோனா தொற்று எவ்­வாறு  பர­வு­கின்­றது என்­பது தொடர்­பாக நாம்  மிகவும் தெளி­வு­டனும் விழிப்­பு­டனும் இருக்­க­வேண்டும்.

எவ்­வாறு பர­வு­கின்­றது?
ஒரு­வ­ருக்கு கொரோனா   வைரஸ் தொற்று இருக்­கு­மாயின்  அவர்  தும்­மும்­போது வெளி­வ­ரு­கின்ற உமிழ் நீரினால் (எச்சில்) மற்­றொ­ரு­வ­ருக்கு இந்த   வைரஸ் பர­வலாம்.  அதே­போன்று  இருவர் நேருக்கு நேர் உரை­யா­டிக்­கொண்­டி­ருக்­கும்­போது  வெளி­வ­ரு­கின்ற உமிழ்­நீ­ரி­னாலும்   இந்த வைரஸ் பரவும். மேலும்   இந்த தொற்­றுள்­ள­வர்கள்   தும்­மும்­போது வெளி­வ­ரு­கின்ற  உமிழ்நீர் துகல்கள்  பல்­வேறு பொருட்­களில் படி­யலாம். வாக­னங்கள்,   மேசைகள், கதி­ரைகள்,  கட்­ட­டங்கள் உள்­ளிட்ட எந்­த­வொரு பொருட்­க­ளிலும் இவை படி­யலாம். எனவே சாதா­ரண மக்கள்   அந்த பொருட்­களில் கையை வைத்­து­விட்டு  மீண்டும்    மூக்கு, வாய், கண் பகு­தி­களைத்  தொடும்­போது இந்த  வைரஸ் பர­வு­வ­தற்­கான அபாயம் இருக்­கின்­றது.   இவையே பிர­தான  நோய்­ப­ரவும் மூலங்­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.

எனவே  நாம்  எவ்­வாறு  விழிப்­பு­ணர்­வுடன் இருந்து எம்மை பாது­காத்­துக்­கொள்­ள­வேண்டும் என்­பதே  இங்கு மிக முக்­கி­ய­மாக காணப்­ப­டு­கின்­றது.  இது தொடர்பில் உலக  சுகா­தார ஸ்தாபனம்  மக்­க­ளுக்கு பல அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யி­ருக்­கி­றது. அதே­போன்று   இலங்­கையின் சுகா­தார  அமைச்சும் பல அறி­வு­றுத்­தல்­களை மக்­க­ளுக்கு வழங்­கி­யி­ருக்­கி­றது.

என்ன செய்­ய­வேண்டும்?  
முத­லா­வது விட­ய­மாக அடிக்­கடி கைகளை  சவர்க்­கா­ர­மிட்டு  சுடு­நீரில்   நன்­றாக கழு­விக்­கொள்­வது மிகவும் அவ­சி­ய­மா­கின்­றது.  சுமார் 20 விநா­டிகள் இவ்­வாறு  கைகளை நன்­றாகத்  தேய்த்­துக்­க­ழு­வ­வேண்டும். அடிக்­கடி   கைகளை நன்­றாகக் கழு­விக்­கொள்­வது  சிறந்­த­­தாகும்.  அதே­போன்று   அடிக்­கடி கைக­ளைக்­கொண்டு வாய், மூக்கு, கண்­களைத் தொடு­வதை முற்­றாகத் தவிர்த்­துக்­கொள்­வதும்  இந்த வைரஸ் பர­வு­வதைத் தடுப்­ப­தற்­கான  மிக முக்­கி­ய­மான ஒரு கார­ணி­யாக  இருக்­கின்­றது.

மேலும்  ஒருவர் தும்­மும்­போது கைக்­குட்­டை­யினால்  வாய், மூக்­குப்­ப­கு­தி­களை மறைத்­துக்­கொள்­வது  மிகவும் அவ­சி­ய­மாக இருக்­கின்­றது. இதன்­மூலம் எச்சில் துகல்கள்   வேக­மாக வெளி­யே­று­வதைத் தடுக்க முடியும்.   அதே­போன்று இருவர் நேருக்கு நேர்  நின்று  உரை­யா­டும்­போது ஒரு குறிப்­பிட்ட   இடை­வெ­ளியைப் பேணு­வது  அவ­சி­ய­மா­கின்­றது. மிக அரு­கி­லி­ருந்து   உரை­யா­டும்­போது   எச்சில் துகல்கள் வெளி­யேறி   அவை மற்­ற­வரை சென்­ற­டையும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது. எனவே  மிக அருகில் இருந்து நேருக்கு நேர் உரை­யா­டு­வதைத் தவிர்ப்­பதும்  சிறந்­த­தாக அமையும்.

 அதே­போன்று  வைத்­தி­ய­சா­லையில் பணி­யாற்­று­கின்­ற­வர்கள்,   முக கவ­சத்தை அணி­வது பொருத்­த­மாக இருக்கும்.   குழந்­தைகள், சிறு­வர்கள், மிரு­கங்­களை தொடும் பட்­சத்தில் உட­ன­டி­யாகக்  கைகளைக்  கழு­வ­வேண்­டி­யது அவ­சியம் என்­பதைப் பெற்றோர் அறி­வு­றுத்­த­வேண்டும்.   அது­மட்­டு­மன்றி  நன்­றாக  சமைத்த உண­வு­க­ளையே உண்­ணு­மாறு  அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­றது.   குறிப்­பாக  இறைச்சி வகைகளை நன்­றாகச்   சமைத்தே உட்­கொள்­ள­வேண்டும் என  அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.  

அறி­கு­றிகள்
இதன்  அறி­கு­றிகள் குறித்தும்    அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.  காய்ச்சல், இருமல், உடல் களைப்பு,  தசை­வ­லிகள், மூச்­செ­டுப்­பதில் சிரமம் போன்­ற­வைகள் காணப்­படின் உட­ன­டி­யாக மருத்­து­வரை நாடு­மாறு   மக்கள் அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­றனர்.

 எனவே இங்கு பொது­மக்கள் பதற்­றப்­ப­டாமல்   அச்­ச­ம­டை­யாமல்  வழங்­கப்­பட்­டி­ருக்­கின்ற அறி­வு­றுத்­தல்­களை  சரி­யான முறையில்  கடைப்­பி­டிப்­பதே   அவ­சி­ய­மா­கின்­றது.  மிக முக்­கி­ய­மாக  குழந்­தைகள் மற்றும் வயது முதிர்ந்­த­வர்­களை உரிய முறையில்   இந்த சுகா­தார   அறி­வு­றுத்­தல்­களை  கடைப்­பி­டிப்­ப­தற்கு   வலி­யு­றுத்­த­வேண்டும்.  இதன் ஊடா­கவே  இந்த   வைரஸ் பர­வலில் இருந்து  எம்மைப் பாது­காத்­துக்­கொள்ள முடியும்.

தற்­போது உயிர்­கொல்லி நோயாக   உள்ள இந்த வைரஸ்  உலக நாடு­களில் மிக வேக­மாகப் பர­விக்­கொண்­டி­ருக்­கின்­றது. எனினும்  அதற்­காக மக்கள்  அச்­ச­ம­டைந்து ஸ்தம்­பித்­து­விட முடி­யாது. மாறாக இந்த நிலை­மை­யி­லி­ருந்து மீண்டு வரு­வ­தற்­கான அறி­வு­றுத்­தல்­களைப் பின்­பற்றி  இதனை முறி­ய­டிப்­பதே தற்­போ­தைய நிலை­மையில் மிக அவ­சி­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. எனவே மிக பிர­தான விட­ய­மாக   கைகளை   அடிக்­கடி சவர்க்­கா­ர­மிட்டு கழு­வு­மாறு வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது. எனவே அதனைச்  செய்­ய­வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மாகும்.

 

சீனாவில் வீழ்ச்சி
தற்­போது உலக  நிலை­மையை  பார்க்­கும்­ போது  சீனாவில் இந்த வைரஸ் பரவும் வேகம் குறை­வ­டைந்­து­வ­ரு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எனினும்  சீனாவை தவிர்ந்த ஏனைய நாடு­களில்  பரவும் வேகம் அதி­க­ரித்­தி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

 சீனா உட்­பட உலகம் முழு­வதும் 119186   கொரோனா நோயா­ளர்கள்  அடை­யாளம் காணப்­பட்­டி­ருக்­கின்­றனர்.  அதே­போன்று 4298 பேர்   இந்த வைரஸ் கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர்.   எனினும்  பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 66619 பேர்   சிகிச்­சை­பெற்று வைர­ஸி­லி­ருந்து மீண்­டுள்­ளனர்.  

  தென்­கொ­ரி­யா­விலும்  கடந்த சில தினங்­க­ளாக இந்த நோயின் வேகம் குறைந்­து­வ­ரு­வ­தா­கவும்  அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இத்­தா­லியில்  நிலைமை மேலும் மோச­ம­டைந்தே செல்­கி­ன்­றது. அங்கு முழு­நாடும்   அந்­நாட்டு அர­சாங்­கத்­தினால் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.  பாட­சா­லைகள் மூடப்­பட்­டுள்­ள­துடன் பொது­வான ஒன்­று­கூ­டல்­க­ளுக்கும் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.  

இது­வரை  இத்­தா­லியில் 9172  பேர்   கொரோனா வைரஸ் தொற்று ஏற்­பட்­ட­வர்­க­ளாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். அதே­போன்று  இந்த வைரஸ் கார­ண­மாக இத்­தா­லியில் 463 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.   சீனா­வுக்கு வெளியே   இத்­தா­லி­யிலேயே  அதி­க­ளவு உயி­ரி­ழப்­புக்கள் இந்த வைரஸ் கார­ண­மாக பதி­வா­கி­யுள்­ளன.  அமெ­ரிக்­கா­விலும்  36 மாநி­லங்­களில் இந்த கொரோனா வைரஸ்  பரவி இருப்­ப­தாக அறி­விக்­கப்­ப­டு­கின்­றது.   இது­வரை 26 பேர்   உயி­ரி­ழந்­துள்­ளனர்.  பிரித்தானிவிலும்  நிலைமை மோச­ம­டைந்து செல்­கின்­றது. அந்­நாட்டின் சுகா­தார   அமைச்­ச­ருக்கும்  கொரோனா நோய் தொற்று பர­வி­யுள்­ள­தாக அறி­விக்­கப்­ப­டு­கின்­றது.

உலக பொரு­ளா­தாரம்?  
இந்­நி­லையில்   உலகின் பொரு­ளா­தா­ரமும் பாரி­ய­தொரு தாக்­கத்­திற்கு உட்­பட்டு வரும் நிலை­மையைக் காண முடி­கின்­றது.   முக்­கி­ய­மாக கப்பல் போக்­கு­வ­ரத்து    விமா­னப்­போக்­கு­வ­ரத்து என்­பன பாதிக்­கப்­பட்­டுள்­ளன.  சுற்­று­லாத்­து­றையும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. எனவே இந்த கொரோனா வைரஸ் தாக்­க­மா­னது உலகின் பொரு­ளா­தார  கட்­ட­மைப்­பையும்  அல்­லது பொரு­ளா­தார    நிலை­யையும் பாரிய தாக்­கத்­திற்கு   உட்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது  என்­பது உண்­மை­யாகும்.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் முதலில்   சீனப்பெண் ஒரு­வ­ருக்கு   கொரோனா வைரஸ் தொற்­றி­யி­ருப்­பது   கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அவர்  ஐ.டி.எச். மருத்­து­வ­ம­னையில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு  கண்­கா­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு பூர­ண ­கு­ண­ம­டைந்து நாடு­தி­ரும்­பி­யி­ருந்தார்.  இந்­நி­லை­யி­லேயே தற்­போது  இரண்­டா­வது கொரோனா வைரஸ் தொற்று ஏற்­பட்­டவர் அடை­யாளம் காணப்­பட்­டி­ருக்­கிறார்.  எனினும் இம்­முறை அடை­யாளம் காணப்­பட்­டி­ருப்­பவர் இலங்கை பிரஜை என்­பதே இங்கு மிக முக்­கி­ய­மான விட­ய­மாகும். இது­வரை   316 பேர்  இலங்­கையில் சந்­தே­கத்தின்  பேரில் பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டனர். 18 பேர் தொடர்­பான   முடி­வுகள் வெளி­வ­ர­வில்லை.  எனினும் ஏனை­ய­வர்­க­ளுக்கு   இந்த வைரஸ் தொற்று  ஏற்­ப­ட­வில்லை என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.   எப்­ப­டி­யி­ருப்­பினும் தற்­போது உலக அளவில்   நிலைமை    மோச­ம­டைந்து வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. எனவே  உலக நாடு­களும்   உலக சுகா­தார ஸ்தாப­னமும் இந்த  நிலைமை தொடர்பில்  உரிய நட­வ­டிக்­கைகளை எடுத்து

 மக்­களை அறி­வு­றுத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.
ஏற்­க­னவே உல­க­நா­டுகள் பல்­வேறு   முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளன. எனினும் அவற்­றையும் மீறி   தற்­போது இந்த  வைரஸ் வேக­மாகப் பர­வு­வதைக் காண­மு­டி­கின்­றது.    

இந்த   வைரஸ் நோய் மற்றும்  அதி­லி­ருந்து எம்மைப்   பாது­காத்துக் கொள்­வது என்­பது தொடர்­பாக   சமு­தாய வைத்­திய நிபுணர் டாக்டர் கேசவன் எம்­மிடம்  கருத்து பகிர்­கையில்:

தற்­போது கொரோனா வைரஸ் தொற்ற பர­வி­யுள்­ள­தாக  அடை­யாளம் காணப்­பட்­டவர் தொடர்­பாக மேல­திக தக­வல்கள் எதுவும் கிடைக்­க­வில்லை. அவர்  குளி­ரூட்­டப்­பட்ட அறையில் இருந்­தாரா அல்­லது  வெளிப்­பி­ர­தே­சங்­க­ளுக்குச் சென்­றாரா என்­பது தொடர்பில் ஆரா­ய­வேண்­டி­யி­ருக்­கி­றது. எப்­ப­டி­யி­ருப்­பினும்  இலங்­கையில்   இந்த நோய் பர­வு­வதைத் தடுப்­பது தொடர்­பாக பல நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.  விமான நிலை­யங்­களில் உரிய கண்­கா­ணிப்பு வேலைத்­திட்­டங்கள்   நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.  இவை மிக உயர்ந்­த­மட்ட நடை­மு­றை­ளாக உள்­ளன.  மேலும் நாட்டின் ஒன்­பது மாகா­ணங்­க­ளிலும் விசேட மருத்­துவ பிரி­வுகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில்  20 கட்டில்களுடன் தனிப்பட்ட வைத்திய அதிகாரிகளுடன் தனிமைப்பபடுத்தப்பட்ட பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன்

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகின்றவர்கள் 14  நாட்கள்  கட்டாய  தனிமைப்படுத்தல் கண்காணிப்புக்குச் செல்லவேண்டும். அதேபோன்று    ஏனைய நாடுகளில் இருந்து வருகின்றவர்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. இந்த செயற்பாடு தொடர்பில்  மக்கள்  பயப்படக்கூடாது.   தனிமைப்படுத்தல் என்பது   கண்காணிப்பு நடவடிக்கை   மட்டுமேயாகும்.  அது  அவர்களுக்கும் நன்மையாகும். அனைத்து தரப்பினருக்கும் நன்மையாகும். எனவே அச்சப்படாமல் இதற்கு ஒத்துழைக்கவேண்டும்.  இங்கு மிக முக்கியமான விடயம் என்னவென்றால் கைகளைச் சவர்க்காரமிட்டு அடிக்கடி  கழுவுவதாகும்.   காற்றினால்  இந்த வைரஸ் பரவமாட்டாது.  மாறாக   எச்சில் துகல்கள் ஊடாகவே பரவுகின்றது. எனவே    தும்மும்போதும் உரையாடும்போதும்  உமிழ்நீர்  துகல்கள்  பரவாமல்  பாதுகாப்பாக இருக்கவேண்டும்.  எந்தவொரு பொருளையும் தொட்டால் உடனடியாக   கைகளை சவர்க்காரமிட்டுக் கழுவவேண்டும்.  உண்மையில் கை கழுவுதல் என்பது ஒரு கலாசாரமாக மாறவேண்டும்  என்பதே    இங்கு அவசியமாகின்றது. கைகளைத் தொட்டு ஒருவரை வரவேற்பதற்கு பதிலாக கைகூப்பி வரவேற்கலாம்.   எனவே  மக்கள் பதற்றமடையவேண்டாம். மாறாக  உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள் என்றார்.

இந்நிலையில் மக்கள் அச்சமடையாமல் பதற்றமடையாமல்  நோய் பரவாமல் தடுப்பதற்காக  அறிவுறுத்தப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.   அதுவே   தற்போதைய நிலைமையில்  இந்த   அச்சுறுத்தலிலிருந்து  விடுபடுவதற்கான ஒரே வழியாகக்  காணப்படுகின்றது.   எனவே இது தொடர்பான  அறிவுறுத்தல்களை  உரிய முறையில் பின்பற்றவேண்டியது  இங்கு அவசியமாகும்.  

- ரொபட் அன்டனி -