இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தருபவர்களை மாத்திரமே மருத்துவ பரிசோதனைக்குட்படுத்துமாறு அரசாங்கத்தினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

சீனர்களை மருத்துவ பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்படவில்லை.

கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பபட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொரோனா தொடர்பில் விமான நிலையத்தில் விஷேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக செயற்படுகின்றோம். அதற்கமைய நாட்டுக்கு வருகை தரும் அனைவரும் விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்கேனர் இயந்திரத்தில் பரிசோதிக்கப்பட்ட பின்னரே உட்செல்ல முடியும்.

சர்வதேச விமான சேவை நிறுவனங்களுடன் கலந்துரையாடி இவற்றை முன்னெடுத்துள்ளோம். மேற்குறித்த 3 நாடுகளிலிருந்தும் வருகை தரும் பயணிகளை வெவ்வேறாக்கி அவர்களது தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன. 

பின்னர் அவர்கள் விஷேட பஸ் மூலம் மருத்துவ கண்காணிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அங்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் இது தொடர்பான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். எனினும் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லை என்று சிலரால் போலியான வதந்திகள் பரப்படுகின்றன. 

இவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறுகேட்டுக் கொள்கின்றோம். சீனர்கள் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களை மருத்துவ கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்புமாறு ஆலோசனை வழங்கப்படவில்லை என்றார்.

இந்நிலையில் தென்கொரியாவில் இருந்த சில நாட்களில் இறுதியாக விமானமொன்று இலங்கை வருமென்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அத்தோடு சினாவில் தற்போது கொரோனா வைரஸின் வேகம் குறைவடைந்துள்ளதால் , சீனர்கள் இலங்கைக்கு வருவதை தடைசெய்ய வேண்டிய அவசியமில்லையென அவர் தெரிவித்தார்.

அதேவேளை சீனாவில் இருந்து இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் தீவிரமாக கண்காணிக்கப்டுகிறார்கள் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.