(எம்.மனோசித்ரா)

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் இன்று வியாழக்கிழமை கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில் கையெழுத்திடப்பட்டது. 

கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு, விமான நிலையம் - விமான சேவைகள் நிறுவனம் ஆகியன ஜப்பான் தாய்செல்  (Taisel) நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் சார்பில் அதன் செயலாளர், விமான நிலையம் - விமான சேவைகள் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரும், ஜப்பான் தாய்செல் (Taisel) நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவரும், இலங்கைக்கான ஜப்பான் தூதுவரும் கையெழுத்திட்டனர்.