(எம்.எம்.மின்ஹாஜ்)

ஜனாதிபதி பதவியில் ஆதிக்கம்பெற்றவராக இருந்தும் தொடர்ந்து இரண்டு முக்கிய தேர்தல்களில் படுதோல்வி அடைந்த மஹிந்த ராஜபக்ஷ முடியுமானால் அடுத்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபையில்  போட்டியிட்டு மேயராகி வெற்றிபெற்று காண்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் டிஜிட்டல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான ஹரீன் பெர்ணான்டோ சவால் விடுத்தார்.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தான் போட்டியிட போவதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருப்பது பெரும் நகைப்புக்குரியதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடப்போவதாக முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ஜப்பான் ஊடகமொன்று வழங்கிய செவ்வியில் குறிப்பி்ட்டிருந்தார். இது தொடர்பில் அமைச்சரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.