மலை­யக மக்கள் முன்­ன­ணியின் பிரதிச் செய­லா­ளரும் மறைந்த தலைவர் சந்­தி­ர­சே­க­ரனின் புதல்­வி­யு­மான அனுஷா சந்­திரசேக­ரனை ஐக்­கிய தேசியக் கட்­சியில் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­கின்­றது.

இந்த அழைப்புத் தொடர்பில் ஓரிரு தினங்­களில் அவர் தீர்­மா­ன­மொன்றை எடுக்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பாரா­ளு­மன்றத் தேர்­தலில் சுயேட்ச்­சை­யா­கவோ அல்­லது கட்­சியின் சார்­பிலோ கள­மி­றங்­கு­வ­தற்கு அனுஷா சந்­தி­ர­சே­கரன் திட்­ட­மிட்­டுள்ளார்.
ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­மையின் அழைப்­பை­ய­டுத்து இந்த விடயம் குறித்து அவர் சிந்­தித்­து­வ­ரு­வ­தா­கவும் ஓரிரு தினங்களில் முடிவொன்றினை எடுக்கவுள்ளதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.