பிரபல ஹொலிவூட் நடிகர் டொம் ஹெங்க்ஸ் தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் 63 வயதுடைய டொம் ஹெங்க்ஸ் தனது முகநூல் பக்கத்தில், ``வணக்கம் நண்பர்களே... ரீட்டாவும் நானும் அவுஸ்திரேலியா வந்தோம். நாங்கள் சோர்வாக உணர்கிறோம். தடிமன் உடல் வலியும் இருக்கிறது. கொஞ்சம் காய்ச்சலும் இருகிறது. இதனால் இருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொண்டோம். இதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுகள் 2020 -இல், தன் வாழ்நாள் முழுக்க சினிமாவுக்காக அர்ப்பணித்த கலைஞருக்கு வழங்கப்படும் விழாவின் மிகப்பெரிய விருதான செஸில் பி டிமில்லே விருது, இந்த முறை `தி டாவின்சி கோட்', ' பொரஸ்ட் கம்ப் ' உள்ளிட்ட படங்களில் நடித்த, டொம் ஹெங்க்ஸுக்கு வழங்கப்பட்டது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் இதுவரை 118 நாடுகளுக்குப் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ், ஒரு தொற்று நோய் என உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.