பஸ் குடைசாய்ந்ததில் பலர் காயம்; வவுனியாவில் சம்பவம்

By Daya

12 Mar, 2020 | 10:25 AM
image

வவுனியா செட்டிகுளம் நேரியகுளம் சந்தியில் இன்று காலை பஸ்  ஒன்று குடைசாய்ந்ததில் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் செட்டிகுளத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற அரச பஸ் நேரியகுளம் சந்தியில் சென்றுகொண்டிருந்த போது மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸூடன் மோதியமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் அரச பஸ் தூக்கி வீசப்பட்டதுடன் அதில் பயணித்த பலர் காயமடைந்த நிலையில் செட்டிகுளம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right