ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் ஐந்து இலட்சம் ரூபா வரை அதிகரித்துள்ளாதக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜப்பானிய யென்னின் பெறுமதி உயர்வடைந்தடையடுத்து வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 

சுசுகி வேகன் ஆரின் விலை 170,000 ரூபாவினாலும், 

டொயோட்டா பாசோவின் விலை 160,000 ரூபாவினாலும், 

டொயோட்டா விட்ஸின் விலை 240,000 ரூபாவினாலும்,

டொயோட்டா ஆக்ஸியோவின் விலை 375,000 ரூபாவினாலும், 

டொயோட்டா பிரீமியோ மற்றும் ஹொண்டா வெசெல்லின் விலை 400,000 ரூபாவினாலும்,  அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்  2020 ஆம் ஆண்டில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட டொயோட்டா ரைஸின் விலையும் ரூபா 400,000 ஆக அதிகரிப்பதுடன், டொயோட்டா சி எச்-ஆர் மற்றும் ஹொண்டா கிரேஸின் விலை ரூ .472,000 வினாலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதே வேளை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏனைய வாகனங்களின் விலைகளும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், இவ் அதிகரிப்பு புதிய இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே சந்தையில் உள்ள வாகனங்கள் தற்போதைய விலையில் தொடர்ந்து அதே விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ் விலை அதிகரிப்பையடுத்து வாகனங்களின் செலவு, காப்புறுதி மற்றும் சந்தை பெறுமதி சுமார் 10 வீதத்தினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.