இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளரான ஷமிந்த ஏரங்க, இதயத்தில் ஏற்பட்ட   உபாதையின்  காரணமாக இங்கிலாந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. 

பயிற்சியின் போதே குறித்த உபாதை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதய துடிப்பில் ஏற்பட்ட மாற்றத்தினாலேயே குறித்த உபாதை ஏற்பட்டதாகவும் பார தூரமான பாதிப்புக்கள் எதுவும் தற்போது இல்லையெனவும் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்னும் 48 மணித்தியாலத்திற்குள் குறித்த உபாதை தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த பரிசோதனைகளின் பின் இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் ஷமிந்த விளையாடுவது குறித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.