(செ.தேன்மொழி)

மத்திய அஞ்சல் பரிவர்தனையின் ஊடாக கடத்தமுற்பட்ட ஒரு கோடி 35 இட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் சுங்கத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பெல்ஜிபத்திலிருந்து மருதானை பகுதிக்கு தபாற்மூலம் வழங்குவதற்காக அனுப்பப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை இன்று சுங்கத்திணைக்களத்தினர் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதன் போது அந்த பொதியிலிருந்து ஒரு கோடி,  35 இட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான போதை மாத்திரை வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதற்கமைய 3885 போதை மாத்திரைகள் ,  1484 கிராம் மிதம்பட்டமைன் எனப்படும் போதைப் பொரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு , பொலிஸ் போதைப் பொருள் திணைக்களத்தினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.