(செ.தேன்மொழி)

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரில் ஸ்ரீ பெரேரா மாவத்தை வாசல வீதி சந்தியிலிருந்து வோல்ஸ் ஒழுங்கைவரையிலான வீதி நீர் வழங்கல் புணரமைப்பு பணிகளுக்காக மூன்று நாட்கள் மூடப்படவுள்ளது. இதனால் குறித்த வீதிகளை பயன்படுத்தும் சரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதற்கமைய நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை குறித்த வீதியின் வாகனம் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதுடன் , இதன்போதே சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் சிரில் சீ பெரேரா மாவத்தை ஊடாக பயணிக்கும் வாகனங்கள் , வேல்ஸ் குமார மாவத்தை ஊடாக இங்குருகொட சந்தி – பாலத்துறை வீதி ,  மாதம்பிட்டி வீதியினூடாக  முகத்துவாரம் - மட்டக்குளி ஆகிய வீதிகளில் சென்று , ஹெக்கியாவை மற்றும் ஹெட்டிகாவத்தை சந்தியில் பிரவேசித்து அழுத்மாவத்தை ஊடாக பயணிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.