அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் வீட்டின் மதில் விழுந்ததில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பொத்துவில் ஹிதாயா புரம் 20ஆம் பிரிவைச் சேர்ந்த இஸ்ஸதீன் முகம்மது அனஸ் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.

மதிலின் மேல் ஏறி நடந்து கொண்டிருந்த சிறுவன் தவறி கீழே விழுந்ததன் பின்னர் மதில் சரிந்து விழுந்ததாலேயே இம் மரணம் ஏற்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. 

இம் மரணம் தொடர்பாக  பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.