வடக்கு கிழக்கை இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது

* ரணிலை விட சில விடயங்களை ஜனாதிபதி கோத்தாபயவிடம் எதிர்பார்க்கலாம்

* எமது பிரசாரங்கள் மூன்று அடிப்படைகளில் அமையும்பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை வைத்­துக்­கொண்டு மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க முடியும் என்றால் அது தவறான  எண்­ண­மாகும். சரி­யான சந்­தர்ப்­பத்தில் நிபந்­த­னை­க­ளுடன் தமிழ் மக்­களின் உரி­மைகள் தொடர்பில் திட­மா­கவும் கொள்கை பிடிப்­போடும் கேள்­வி­யெ­ழுப்பும் திராணி கொண்ட ஒருவர் அல்லது இருவர் மக்கள் பிர­தி­நி­தி­க­ளாக இருந்­தாலே போது­மா­னது. அவ்­வா­றா­ன­வர்கள் பாரா­ளு­மன்றம் செல்ல வேண்டும் அப்­ப­டி­யா­ன­வர்­களை அங்கு அனுப்­பு­வ­தற்­கான முயற்­சி­யி­லேயே நாம் இறங்­கி­யி­ருக்­கின்றோம் என வட­மா­காண முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்­ட­ணியின் தலை­வ­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்தார். எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான கூட்­ட­ணியின் வியூகம் மற்றும் ஜெனீவா பேரவை தொடர்பில் வீர­கே­சரி வார வெளி­யீட்­டுக்கு அவர் வழங்­கிய செவ்­வியின் விபரம் இங்கு தரப்­ப­டு­கின்­றது. 

கேள்வி: தமிழ்க் கட்­சிகள் பிள­வு­ப­டக்­கூ­டாது என தமி­ழீழ விடு­தலைப் புலிகள்  நினைத்­த­தா­லேயே  தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்பு உரு­வா­னது. ஆனால் தற்­போது நிலைமை அப்­ப­டி­யில்லை. நீங்­களும் ஒரு கட்­சியை தொடங்­கி­யுள்ள சூழ்நிலையில் எந்­த­ள­வுக்கு இது தமிழ் மக்கள் மத்­தியில் வர­வேற்பை பெறும் என்று நினைக்­கின்­றீர்கள்?

பதில்: எல்லோர் மனதில் இருக்கும் கேள்­வியும் இது தான். நாம் எல்­லோரும் ஒரு­மித்து 15 பேரை ஐந்து வரு­டங்­க­ளுக்­காக பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்­பினோம். இன்று வரையில் அவர்கள் தமி­ழர்­க­ளுக்கு என்ன செய்­தி­ருக்­கின்­றார்கள்?  நான் பாரா­ளு­மன்­றத்தில் இருந்­தி­ருந்தால் முத­லா­வது வரு­டத்­தி­லேயே ஒரு பிரச்­சி­னையை எடுத்­தி­யிருப்பேன். அதா­வது அர­சாங்­கத்தின் முத­லா­வது வரவு செலவுத் திட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளிக்­கிறோம். ஆனால் நீங்கள் சிறை­யி­லி­ருக்கும் 300 பேர் வரை­யான தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய வேண்டும் என உறுதி வழங்க வேண்டும் என்று கேட்­டி­ருப்பேன். ஏனென்றால் இது சாத்­தி­ய­மான விட­ய­மாகும். ஜே.வி.பி காலத்தில் அனை­வ­ரையும் அப்­போ­தைய அர­சாங்கம் பொது மன்னிப்பில் விடு­தலை செய்­தி­ருந்­தது. ஆகவே இது ஓர் உதா­ர­ணமே. இவ்­வாறு பல வழி­களில் அர­சாங்­கத்­துக்கு நெருக்­கு­தல்­களை செய்­தி­ருந்தால் எமது மக்­க­ளுக்கு பல விட­யங்­களைப் பெற்­றுக்­கொ­டுத்­தி­ருக்­கலாம். எதிர்­வரும் தேர்­தலில் வட­மா­கா­ணத்­தி­லி­ருந்து பாரா­ளு­மன்­றத்­துக்குச் செல்­ப­வர்­களில்  ஓரிருவர் தவிர மற்ற அனை­வ­ருமே தமி­ழர்­க­ளா­கவே இருக்­கப்­போ­கின்­றனர். அவர்கள் அங்கு சென்று தமி­ழர்கள் சார்­பாக ஒரு­மித்து சில விட­யங்­களில் முடி­வு­களை எடுக்­கக்­கூடும். ஒரே கட்­சி­யி­லி­ருந்து அத்­த­னைப்பேர் சென்று நன்­மைகள் கிடைக்கும் என்று எதிர்­பார்த்­ததில் அப்­படி ஒன்றும் நடக்­க­வில்லை. ஆகவே கொள்கை ரீதி­யாக திட­மாக அர­சாங்­கத்­துக்கு சில விட­யங்­களை சொல்­லக்­கூ­டிய ஓரி­ருவர்  அந்த 15 பேருக்கு இணை­யா­ன­வர்கள் என்­பது தான் எனது கருத்து. ஆகவே உறுப்­பி­னர்­களின் தொகையைக் கொண்டு அவர்கள் ஏதோ செய்­யப்­போ­கின்­றார்கள் என எண்­ணு­வது தவறு. 

கேள்வி: கடந்த காலங்­களில் உங்­களை விமர்­சித்­த­வர்­க­ளுடன் கூட்டு சேர்ந்­தி­ருக்­கின்­றீர்­களே? அர­சி­யலில் நிரந்­தர நண்­பனும் இல்லை எதி­ரியும் இல்லை என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா? 

பதில்:  மக்­களின் நன்மை கருதி எமக்கு  எதி­ரான கருத்­து­களை கொண்­டி­ருப்­ப­வர்­க­ளி­டமும் கூட்டு சேர வேண்­டிய அவ­சியம் இருக்­கின்­றது.  தனித்­த­னி­யாக கட்சி ரீதி­யாக இயங்கும் போது விமர்­ச­னங்கள் அல்­லது எதி­ரான கருத்­து­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்டி வரும். ஆனால்  தமிழ் மக்­க­ளுக்­காக ஒரு­மித்து பய­ணிக்கும் போது  எத்­த­கைய முரண்­பா­டு­களை கொண்­ட­வர்­களும் ஒரு­மித்து செயற்­பட முடியும் என்­ப­தையே நாம் உணர்த்­தி­யுள்ளோம். எங்­க­ளிடம் இணைந்­துள்ள நான்கு பேரும் ஒரு பல­மான கூட்­ட­ணியை அமைத்­துள்­ளார்கள். ஒரு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தமும் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. அதை மக்­க­ளி­டத்தில் பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­துவோம். எங்­க­ளி­டத்­திலே இர­க­சி­ய­மான சிந்­த­னைகள் இல்லை. தற்­செ­ய­லாக எங்­களில் யாரா­வது ஒருவர் தவ­றான வழியில் சென்றால் அதற்கு என்ன செய்ய  வேண்டும் என்­பது குறித்து ஒப்­பந்­தத்தில் கூறப்­பட்­டுள்­ளது. 

கேள்வி: அப்­ப­டி­யானால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருக்கும் போது ஏன் இது சாத்­தி­ய­மற்றுப் போனது? 

பதில்: எங்­க­ளு­டைய சிந்­த­னையை அவர்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பில் ஒரு சிலர் தங்­க­ளுக்கு மட்­டுமே எல்லாம் தெரியும் என்ற மம­தை­யிலும் அகந்­தை­யிலும் ஆண­வத்­திலும் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர்.  உதா­ர­ண­மாக ஒரு சம்­ப­வத்தை கூறலாம். நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பெப்­ர­வரி 3 ஆம் திகதி அதா­வது சுதந்­திர தினத்­துக்கு முதல் நாளன்று எனது வீட்­டுக்கு கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனும் சுமந்­தி­ரனும் வருகை தந்­தி­ருந்­தார்கள்.  அப்­போது சம்­பந்தன் என்­னிடம் ‘நாளை சுதந்­திர தின நிகழ்­வுக்கு வரு­வீர்­களா’ என்று கேட்டார். அதற்கு நான் தய­வு­செய்து அதைப்­பற்றி என்­னிடம் கதைக்­கா­தீர்கள் நீங்கள் வேண்­டு­மானால் செல்­லுங்கள் என்றேன். ஏனெனில், 1958 ஆம் ஆண்டு நான் றோயல் கல்­லூ­ரியில் மாண­வ­னாக இருந்த போது ஒரு சுதந்­திர தின அணி­வ­குப்பில் கலந்து கொண்ட பிறகு இதுவரை எந்­த­வொரு நிகழ்­விலும் ஏன் நீதி­ய­ர­ச­ராக பதவி வகித்த காலத்­திலும் நான் சுதந்­திர தின நிகழ்­வு­களில் பங்கு கொண்­ட­தில்லை. ஏனென்றால் இலங்கை தமி­ழர்­க­ளுக்கு இன்னும் சுதந்­திரம் கிடைக்­க­வில்லை என்­பதே எனது நிலைப்­பாடு. எனது கருத்தை அவர்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இப்­போது ஒரு நல்ல ஆட்சி மலர்ந்­தி­ருக்­கின்­றது. ஆகவே அவர்­க­ளுக்கு எமது ஒத்­து­ழைப்பை நல்க வேண்டும் என்­றார்கள். ஒத்­து­ழைப்பை நல்­கு­வதில் பிரச்­சி­னை­யில்லை ஆனால் அவர்­க­ளி­ட­மி­ருந்து எமது மக்கள் சார்­பாக சில­வற்றை பெற்­றுக்­கொள்­வ­தாக இருத்தல் வேண்டும் என்றேன். ஆனால் அதற்கு அவர்கள் உடன்­ப­ட­வில்லை. ஆகவே கொள்கை ரீதி­யாக ஒத்துப் போகா­விட்டால் நான் என்ன செய்­வது? மக்­க­ளுக்கு ஏதா­வது நடக்கும் என்ற நம்­பிக்­கையில் தான் இந்த முது­மை­யிலும் நான் அர­சி­யலில் பிர­வே­சித்தேன். ஆனால்  அவர்கள் என்னை செயற்­பட விட­வில்லை. 

கேள்வி: சஜித் பிரே­ம­தா­ஸவை தமிழ்க் கட்­சிகள் ஆத­ரிப்­பதை பற்­றிய உங்கள் நிலைப்­பாடு என்ன?

பதில்: என்­னைப்­பொ­றுத்­த­வரை சிங்­களத் தலை­வர்கள் அனை­வ­ருமே தமி­ழர்­களின் நியா­ய­மான கோரிக்­கை­க­ளுக்கு  செவி சாய்ப்­ப­தற்கு தயங்­கு­கின்­றனர்.  தமி­ழர்­க­ளுக்கு ஏதா­வது செய்ய வேண்டும் என அவர்கள் உள் மனதில் நினைத்­தாலும் கூட தேர்­தல்­களின் போதோ அல்­லது சிங்­கள மக்கள் மத்­தியில் அதை வெளிப்­ப­டுத்­து­வ­தில்லை. ஆகவே தமி­ழர்­க­ளுக்கு ஏதா­வது செய்வோம் என சிலர் பாசாங்கு செய்­வார்கள் சிலர் வெளிப்­ப­டை­யாக ஒன்றும் செய்ய மாட்டோம் என்­பார்கள். சஜித்தை பொறுத்த வரை அவர் எப்­போ­துமே சிங்­கள பெளத்த  சிந்­த­னையில் இருப்­பவர். அவ­ரது நட­வ­டிக்­கை­களும் அவ்­வாறே இருக்­கின்­றன. இடம்­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் கூட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் வெளிப்­ப­டை­யாக அவ­ருக்கு ஆத­ரவு என்று அறி­வித்­த­தா­லேயே அவர் தோல்­வியை தழு­வினார். அந்த ஆத­ரவு அறி­விப்பு சிங்­கள மக்­களை சிந்­திக்கத் தூண்­டி­யது. எனக்­குத்­ தெ­ரிந்த வரை அவ­ருக்கு ஆத­ரவு அளிக்­க­வி­ருந்த மக்கள் மற்றும் சிங்­க­ளத்­ த­லை­வர்கள் இந்த அறி­விப்­புக்குப் பின்னர் தமது எண்­ணங்­களை மாற்­றிக்­கொண்­டனர். ஆகவே அவர் ஒரு சிங்­கள பெளத்த அர­சி­யல்­வா­தி­யா­கவே இருக்­கின்­றாரே ஒழிய ஒரு பரந்­து­பட்ட சிந்­தனை கொண்ட முழு நாட்டு மக்­க­ளையும் ஒன்­றாக நோக்கக் கூடிய ஒரு மனி­தா­பி­மானம் கொண்ட பின்­னணி அல்­லது பின்­புலம் அவ­ருக்கு இல்லை. 

கேள்வி: கூட்­ட­மைப்பை எதிர்த்து உங்­களால் அதிக ஆச­னங்­களை பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பெற முடி­யுமா? 

பதில்: இத்­தனை நாள் வரையில் கூட்­ட­மைப்பின் செயற்­பா­டு­களில் மக்­க­ளுக்கு ஒரு வெறுப்பு ஏற்­பட்­டுள்­ளது. மக்­க­ளி­டத்தே இவர்கள் பற்­றிய எதிர்கருத்­துகள் நில­வு­கின்­றன. ஆகையால் அவர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பதை மக்கள் தவிர்ப்பர். எனினும் எமது கட்சி புதி­யது. இது ஆரம்­பித்து ஒன்­றரை வரு­டங்கள் கூட இல்லை. எனினும் மக்கள் நலம் சார்ந்து சிறந்த கொள்­கை­யுடன் கள­மி­றங்­கு­கிறோம். ஆகவே மக்கள் எமக்கு ஆத­ரவை நல்­கு­வார்­க­ளே­யானால் எம்மால் வெற்றி பெறலாம். மேலும் அதிக ஆச­னங்­களைப் பெறு­வ­தற்கு எங்­களால் ஆன முயற்­சி­களை மேற்­கொள்வோம்.

கேள்வி: அவ்­வாறு உங்கள் கட்சி வெற்றி பெறும் பட்­சத்தில் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­படும் சாத்­தி­ய­முள்­ளதா? 

பதில்: எந்த கட்சி ஆட்­சி­ய­மைக்கும் என்­பது இதுவரை தெரி­யாது. ஆனால் எந்த அர­சாங்கம் வந்­தாலும் எமக்கான முக்­கி­ய­மான விடயம் தமிழ் மக்­களின் எதிர்­காலம். வெறுமனே அவர்­க­ளுக்கு ஆத­ரவு அளித்து கொண்டு கைகளை உயர்த்தி காலத்தை கடத்தும் எண்ணம் கிடை­யாது. அந்த அர­சாங்கம் மூலம் தமிழ் மக்­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய விட­யங்­களைப் பெற்று கொண்டு அல்­லது அதற்­கான வழி­வ­கைகள் ஊடா­கவே அவர்­க­ளுடன் இணைந்து கொள்ளும் சாத்­தி­யங்­களை ஆராய்வோம்.

கேள்வி: வட­மா­கா­ணத்தின் முத­ல­மைச்­ச­ராக ஐந்து வரு­டங்கள் இருந்­தீர்கள். முத­ல­மைச்­ச­ராக சாதிக்க முடி­யா­த­வற்றை ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக சாதிக்க முடியும் என்று கரு­து­கி­ன்றீர்­களா?  

பதில்: நிச்­ச­ய­மாக, காரணம் வட­மா­காண சபையின் அதி­கா­ரங்கள் மிக மிக குறைந்­த­வை­யாகும். மத்­திய அர­சாங்­கத்­தினால்  பல வழி­க­ளிலும் அதை கட்­டுப்­ப­டுத்த முடியும். அப்­படி நடந்­ததால் தான் என்னால் ஒன்­றையும் செய்ய முடி­யாது போனது. அதை விட எனது சொந்த கட்­சியே எனக்கு எதி­ராக வேலை செய்யும் போது எவ்­வாறு இயங்­கு­வது?  முதலில் முத­ல­மைச்­சரின் நிதியை எனக்குப் பெற­மு­டி­ய­வில்லை. ஒரு வெளி­நாட்டு நிறு­வனம் வன்­னியில் பழங்கள் மற்றும் காய்­க­றி­களை உற்­பத்தி செய்து அதை ஏற்­று­மதி செய்யும் திட்­ட­மொன்றை கொண்டு வந்தது. அதன் மூலம் பல­ருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலைமை இருந்­தது. சிறந்த நீர்வளம், சுற்­றாடல் மற்றும் கால­நிலை என்­பன சிறப்­பாக இருக்­கின்­றன என நிறு­வனம் மிகவும் திருப்­தி­ய­டைந்­தது. எனினும் அத்­திட்டம் ஆரம்­பிக்­கப்­ப­டவே இல்லை. ஏனென்றால் குறித்த காணி வன­வளத் திணைக்­க­ளத்­துக்கு சொந்­த­மா­னது என அர­சாங்கம் கூறி­யது. வரை படத்தின் படி அது எவ­ருக்கும் சொந்­த­மா­ன­தில்லை என்று ஆதா­ரங்­களை காட்­டினோம். அது பழை­யது புதிய வரை­படம் எங்­க­ளிடம் உள்­ளது என்­றார்கள். எப்போது புதிய வரை­படம் வந்­தது என்று கேட்டோம். 2007 ஆம் ஆண்டு என்­றார்கள். அப்­போது தான் யுத்தம் நடந்து கொண்­டி­ருந்­ததே எவ்­வாறு வரை­படம் கீறப்­பட்­டது என்று கேட்­ட­தற்கு வானத்­தி­லி­ருந்து கூகுள் வரை­படம் மூலம் பெற்றோம் என்­றார்கள். அது சட்­டத்­துக்கு புறம்­பா­னது என்று கூறி­னாலும் இல்லை இடத்தை தர முடி­யாது என்­றார்கள். இப்­படி எத்­த­னையோ தடைகள். அர­சாங்­கத்தின் அதி­கா­ரிகள் எம்மை ஒன்றும் செய்­ய­வி­ட­வில்லை. வெளி­நாட்டு அர­சியல் பிர­மு­கர்கள் கூட சில விட­யங்­களில் தெளிவைப் பெறு­வ­தற்கு எம்­மையே நாடி வந்­தார்கள். 

ஏனென்றால் நாங்கள் எமது பிரச்­சி­னையை பல­ருக்கும் தெரி­வித்­தி­ருந்தோம். அதற்கும் தடை வந்­தது. இவர் மாகாண சபைக்­காரர் தானே எவ்­வாறு எம்.பிக்­க­ளுடன் பேச முடியும் என்­றார்கள். அவர்­க­ளுடன் கதைத்து எதையும் பெற முடி­யாது என்ற கார­ணத்­தி­னா­லேயே அவர்கள் என்னை நாடி வந்­தனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்­குழு உயர்ஸ்­தா­னி­க­ராக செயற்­பட்ட ஹுசைன் வருகை தந்தபோது காணாமல் போன­வர்கள் பற்­றிய தக­வல்­களை  நூல் வடி­வ­மாக கொடுத்தோம். ஆகவே பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்தால்  சர்­வ­தே­சத்­துடன் தொடர்­பு­களை பேணலாம். அதில் தடைகள் இருக்­காது. 

கேள்வி: ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில்  உங்கள் கருத்­துகள் கோத்­தா­பய ராஜ­ப­க் ஷ­வுக்கு சார்­பாக இருந்­ததை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­ததே?

பதில்:  எந்த ஒரு உணர்­வுள்ள தமிழ்­ம­கனும் கோத்­தா­ப­ய­வுக்கு வாக்­க­ளிக்க மாட்டார் என்றும் நான் கூறி­யி­ருந்­த­தையும் நீங்கள் அவ­தா­னிக்க வேண்டும்.  சில நேரங்­களில் சிலர்  நேர­டி­யான நட­வ­டிக்­கை­களை எடுப்பர், முகத்­துக்கு முன்­பாக பேசுவர். அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் எமக்கு கோபம் எழலாம் அல்­லது கருத்­துப்­ப­ரி­மா­றல்கள், விவா­தங்கள் நடக்­கலாம்.  அதேவேளை நேர­டியாக கதைப்­பதன் மூலம் சில நேரங்­களில் தீர்வு­க­ளையும் பெறலாம். அந்த வகையில் எதையும் நேர­டி­யாக பேசும் ஒரு­வ­ராக கோத்­தா­பய இருக்­கிறார் என்று தான் நான் கூறினேன். இவ்­வா­றா­ன­வர்­க­ளிடம் பேச்சு நடத்­தலாம். அதா­வது முடியும் அல்­லது  முடி­யாது என நேர­டி­யா­கவே கூறும் போது நாம் அடுத்த கட்டம் பற்றி சிந்­திக்­கலாம் அல்­லவா? ஆனால் ஐக்­கிய தேசியக் கட்சித் தலை­வர்­க­ளிடம் இந்த குணம் இல்லை. ஜெனீவா விவ­கா­ரத்­திலும் அப்­ப­டித்தான் நடந்து கொண்­டனர். இணை அனு­ச­ரணை ஒன்றை கோரி நின்­றனர். தீர்­வுக்கு இரண்டு வரு­டங்கள் கேட்­டனர். பின்னர் மறு­படி இரண்டு வரு­டங்கள் கேட்­டனர். இறு­தி­யாக இன்னும் இரண்டு வரு­டங்­களை கோரினர். இதன் மூலம் என்ன நடந்­தது. தமிழ் மக்­க­ளுக்கு ஒன்­றை­யுமே பெற்­றுக்­கொ­டுக்­காது காலத்தை கடத்­திய அதே நேரம் தமிழ்ப் பிர­தி­நி­தி­க­ளையும் தமது பக்கம் வைத்­துக்­கொண்­டனர். 

ஜனா­தி­பதி கோத்­தா­பய என்ன செய்தார்? இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வெளியே வரு­கிறேன் என நேர­டி­யா­கவே கூறி அதை செய்து முடித்தார். இதை நீங்கள் கவ­னிக்க வேண்டும். எதிர்­கா­லத்தில் இப்­ப­டி­யான ஒரு­வ­ருடன் சில விட­யங்­களை கதைத்து தீர்வை பெறலாம். இவர் வெளிப்­ப­டை­யாக இயங்­கு­கிறார் என்­ப­தையே நான் கூற வரு­கிறேன். ஆகவே சில தலை­வர்­களின் குணா­தி­சயங்கள் அறிந்து அவர்­க­ளுடன் பேச வேண்டும். நான் கூறிய மற்ற தரப்­பி­னரோ எமக்கு உத­வு­வது போன்று நடித்து எம்மை திசை திருப்பி இறு­தியில் கை விட்டு விடுவர். 

எந்த சந்­தர்ப்­பத்­திலும் தமக்கு முடியும் அல்­லது முடி­யாது என வெளிப்­ப­டை­யாக பேசவே மாட்டர்.  அந்த அர்த்­தத்­தி­லேயே நான் ஜனா­தி­பதி கோத்­தா­பய பற்றி கூறினேன். 

கேள்வி:   ஜெனீவா பிரே­ர­ணை­யி­லி­ருந்து இலங்கை வில­கி­யமை தமி­ழர்­க­ளுக்கு எந்­த­ள­வுக்கு சாத­க­மாக உள்­ளது?

பதில்: பிரே­ர­ணை­யி­லி­ருந்து வில­கி­யமை தமி­ழர்­க­ளுக்கு சாத­க­மான விடயம் தான். சர்­வ­தேசம் தொடர்ந்தும் தமி­ழர்கள் சார்­பாக பேச ஆரம்­பித்­துள்­ளதே. ஜனா­தி­பதி கோத்­தா­பய எமக்கு சாத­க­மா­னவர் இல்லை தான் . ஆனால் தமி­ழர்­க­ளுக்கு சாத­க­மான ஒரு சூழல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது என்பேன். மேலோட்­ட­மாக பார்க்கும் போது தமி­ழர்­க­ளுக்கு நீதி கிடைக்­காது போகுமோ என்ற அச்சம் தோன்­றி­யி­ருக்­கின்­றது. ஆனால் அவர்­க­ளுக்கு சாத­க­மான சம்­ப­வங்கள் இடம்­பெறும் ஒரு சூழல் உரு­வா­கி­யி­ருப்­பதை நாம் அவ­தா­னிக்­கலாம். 

கேள்வி: உங்கள் கட்­சி­யா­னது என்ன அடிப்­ப­டையில் மக்கள் மத்­தியில் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கப்­போ­கின்­றது?

பதில்: நாம் முக்­கி­ய­மான மூன்று விட­யங்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு  எமது பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கப்­போ­கின்றோம்.

1) அர­சியல் ரீதி­யான தன்­னாட்சி  

2) மக்கள் சார்­பான தற்­சார்பு (Self –Reliant) 

3) தன்­னி­றைவு 

அர­சியல் ரீதி­யாக எதையும் பெற்­றுக்­கொள்­வதில் எமக்கு நம்­பிக்கை உள்­ளது. ஆகவே எமது சமூ­கத்­துக்­கான தன்­னாட்சி என்ன என்­பது குறித்து விவா­தித்து அதை பெற முயற்­சிப்போம். வடக்கு கிழக்கை இணைக்க வேண்­டிய அவ­சியம்  குறித்து நாம் மக்­க­ளுடன் கதைத்து வரு­கின்றோம். தன்­னாட்சி என்­பது வெறு­மனே ஒரு யோசனை அல்ல. தமிழ் மக்கள் இருக்கும் பிர­தே­சத்தில் அவர்­க­ளுக்­கான ஒரு தனி அலகு அவ­சியம். இல்­லா­விடின் அது எதிர்­கா­லத்தில் வேறு சிக்­கல்­களை தோற்­று­விக்கும். ஆகவே அந்த தாக்கம் ஏற்­படும் முன்னர் வடக்­கையும் கிழக்­கையும் இணைக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது.   அதே­வேளை தற்­சார்பு எனும் போது மற்­ற­வ­ரி­டத்­தி­லேயே எல்­லா­வற்­றையும் கேட்டு பெறல் அல்­லது என்ன கிடைக்கும் என்று எதிர்­பார்த்­தி­ருத்தல் , மற்­ற­வ­ரி­டத்தில் தங்­கி­யி­ருத்­தலை அகற்ற வேண்டும். போருக்குப் பின்னர் இந்த நிலைமை அதி­க­ரித்­துள்­ளது. எங்­களில் நம்­பிக்கை வைத்து தற்­சார்­பாக அதா­வது தன்­னம்­பிக்­கையை வளர்த்து கொள்ளும் நிலை­மைக்கு சமூ­கத்தை மாற்­றி­ய­மைக்க வேண்டும். அடுத்­த­தாக தன்­னி­றைவு. எங்கள் பிர­தே­சத்தில் எல்லா வளங்­களும் நிறைந்து கிடக்­கின்­றன. ஆனால் நாம் மற்­ற­வ­ரி­டத்தில் கையேந்தி நிற்கும் நிலை­மைகள் தொடர்­கின்­றன. அதா­வது எல்­லா­வற்­றையும் தெற்­கி­லி­ருந்து பெற வேண்­டிய நிலை­மை­களை மாற்ற வேண்டும். சில விட­யங்­களில் தாரா­ள­மாக நாம் தன்­னி­றைவை பெறலாம். அதா­வது எமக்கு போதிய காய்­க­றி­களை இங்கு பெற்று அதை பின்பு  இங்­கி­ருந்து தெற்­கிற்கு   அனுப்­பலாம். அதற்­க­டுத்து வெளி­நாட்­டுக்கும் அனுப்­பலாம்.  அவ்­வா­றா­னதோர் சூழலை அர­சியல் அதி­கா­ரங்­க­ளுடன் மாற்­றி­ய­மைக்­கலாம்.  அதா­வது எங்­களை நாம் பொரு­ளா­தார ரீதி­யாக பலப்­ப­டுத்­திக்­கொண்டால் ஏனைய விட­யங்­க­ளைப்­பற்றி பேசலாம். 

கேள்வி: நீங்கள் முன்­வைத்­துள்ள மூன்று விட­யங்­களில் தன்­னாட்சி என்ற விடயம் தனி நாட்டு கோரிக்கை போன்று அர்த்­தப்­ப­டு­கின்­றது. பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளிடம் இது சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தாதா? எவ்­வாறு அவர்­க­ளுக்கு விளக்­கப்­போ­கின்­றீர்கள்?

பதில்: ஆம் சற்று கடி­ன­மான காரியம் தான். ஏனென்றால் உண்­மை­யாக தூங்­கிக்­கொண்­டி­ருப்­ப­வனை எழுப்­பலாம் பாசாங்கு செய்­ப­வனை எழுப்ப முடி­யாது. சமஷ்டி என்­பது நாட்டை பிரிப்­பது அல்­லது அது ஐக்­கி­யப்­ப­டுத்­து­வது என்­பது சிங்­களத் தலை­வர்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். ஆனால் அதை ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள். அவர்கள் அர­சியல் ரீதி­யாக நன்­மை­களைப் பெறு­வ­தற்கு நாட்டை பிரிக்­கி­றார்கள் என்று மக்கள் மத்­தியில் பிர­சா­ரத்தை மேற்­கொள்­வார்கள். அதில் எம்மை பலி­க­டா­வாக்­கு­வார்கள். ஆனால் நான் எமது கொள்கை குறித்து சிங்­கள மக்­க­ளிடம் பேசிக்­கொண்­டி­ருக்­கின்றேன். தன்­னாட்சி என்றால் அந்த பிர­தேச மக்­களின் சுயாட்சி என்­பதன் அர்த்­தத்தை விளங்­கப்­ப­டுத்த வேண்­டி­ய­தா­க­வுள்­ளது. சில சிங்­கள ஊட­கங்­களின் மூலம் அதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தேன் மேலும் மகா­நா­யக்­கர்­களை சந்­தித்தேன். எனினும் அது போதாது என்று தான் கூற வேண்டும். எனினும் நான் பாரா­ளு­மன்றம் சென்றால் நிச்­ச­ய­மாக அதை சிங்­கள மக்­க­ளிடம் எடுத்துக் கூற வேண்­டிய சூழ்­நி­லைகள் ஏற்­படும். அந்த மக்­க­ளிடம் நேர­டி­யாகச் சென்று புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­துவேன். 

நான் அர­சி­ய­லுக்கு வரு­வ­தற்கு முன்னர் காலி மாவட்ட சட்­டத்­த­ர­ணிகள் அமைப்­பினர் என்­னுடன் சந்­திப்பை ஏற்­ப­டுத்­தினர். நான் சமஷ்டி மற்றும் ஏனைய விட­யங்கள் குறித்து பேசினேன். அதை அவர்கள் ஏற்­றுக்­கொண்­டனர். அவர்கள் சட்டம் படித்­த­வர்கள் . சமஷ்டி என்­பது நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்­துமே ஒழிய பிரிக்­காது என்று  அவர்­க­ளுக்கு நன்­றா­கத்­தெ­ரியும் . ஆகவே சிங்­கள மக்­க­ளுக்கு போது­மான புரிந்­து­ணர்வை நாம் ஏற்­ப­டுத்­தினால் இதில் நாம் வெற்றி காண முடியும். 

கேள்வி:   நாட்டில் ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் வாழ்ந்து வரும் தமிழ் மக்­க­ளுக்கும் பிரச்­சி­னைகள் இருக்­கின்­ற­னவே குறிப்­பாக மலை­யக மக்கள்? 

பதில்: நான் இல்லை என்று கூற­வில்லை. ஆனால் எமது நோக்­கங்கள் பிர­தா­ன­மாக வடக்கு கிழக்கு மக்­களை மையப்­ப­டுத்­தி­ய­தாக இருக்­கின்­றன. ஆனாலும் நாட்டின் ஏனைய பிர­தே­சங்­களில் வாழ்ந்து வரும் மக்­க­ளிடம் நாம் தொடர்­பு­களை பேணி வரு­கின்றோம். மலை­ய­கத்தைப் பொறுத்­த­வரை எங்கள் கருத்­துக்­க­ளோடு ஒத்துப் போகின்ற பிர­தி­நி­தி­க­ளுக்கு நாம் ஆத­ரவை தர வேண்­டுமே ஒழிய நாம் அங்கு சென்று எமது பிர­தி­நி­தி­களை தேர்­தல்­களில் நிறுத்­தக்­கூ­டாது. அது இரு தரப்­பி­ன­ருக்கும் பொருத்­த­மில்­லாத செய­லாகும்.  மலை­ய­கத்தில் மட்­டு­மல்ல ஏனைய இடங்­க­ளிலும் தான். தமிழ் மக்கள் என்றால் அனை­வரும் ஒரு­வரே. ஆனால் அவர்கள் வாழ்ந்து வரும் சூழலில் பிரச்­சி­னைகள் வேறு­ப­டு­கின்­றன. மலை­யகம்,வடக்கு ,கிழக்கு மற்றும் தலை­நகர் ஆகிய பிர­தே­சங்­களில் வாழ்ந்து வரும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் வேறு­பட்­டவை. ஆகவே அந்­தந்த பிர­தே­சங்­களில் அந்­தந்த  மக்கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தலை­வர்­க­ளுக்கு நாம் அனு­ச­ர­ணை­யாக இருக்க வேண்­டுமே ஒழிய அங்கு சென்று அந்த மக்­க­ளிடம் எமது கட்சி அடை­யா­ளத்­தையோ  அல்லது எமது நோக்கங்களையோ திணிக்க முற்படக் கூடாது. எங்கிருந்தாலும் தமிழ் மக்கள் எமது சகோதரர்களே. அவர்களை வேற்றுமை படுத்தி பார்க்கக் கூடாது. 

கேள்வி: புதிய தேசிய கட்சியாக உருவெடுத்திருந்தாலும் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு விளங்குகிறது  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன. உங்கள் தன்னாட்சி கோரிக்கை தேர்தல் பிரசாரமாக முன்னெடுக்கப்பட்டால்  மீண்டும் அந்த கட்சியினரே ஆட்சியமைக்கக்கூடிய சூழல் ஏற்படாதா? 

பதில்:  பேரினவாத சக்திகள் வடக்கு கிழக்கில்   ஊடுறுவக்கூடிய சாத்தியங்கள் இல்லை. அதேவேளை தெற்கில் இது ஒரு பிரசாரமாக கொண்டு செல்லப்பட்டால் அது சிங்கள மக்களின் ஆதரவை பெறக்கூடிய ஒரு விடயமாகத்தான் இருக்கும். மாறாக தமிழ் மக்களுக்கு எதிரானதாக இருக்காது. இங்கு அது வேறு கட்சிகளின் மூலம் முன்னெடுக்கப்பட்டாலும் தமிழ் மக்களிடம் எடுபடாது. கூறப்போனால் எனக்கெதிரான பிரசாரங்களே இங்கு முன்னெடுக்கப்படும். தமிழ் மக்களுக்கு எதிராக இங்கு ஒன்றும் எடுபடாது. 

இருப்பினும் தமிழ் மக்களுக்கு இவ்வாறான ஒரு தீர்வை நாம் பெற  வேண்டுமானால் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுக்கொண்டவர்களிடமிருந்து மட்டும் தான் அதை பெற்றுக்கொள்ள முடியும். அவர்களின் ஆதரவு இல்லாதவர்களிடம் இதை பெற முடியாது. ஆகவே தற்போதைய அரசாங்கத்தின் எண்ணங்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குப்பின்னர் மாற்றமடையும் என நான் எதிர்பார்க்கின்றேன். 

கேள்வி: உங்கள் கூற்றுப்படி சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்ற தற்போதைய ஜனாதிபதியிடமிருந்து தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றீர்களா? 

பதில்: நாம் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு தீர்வு கிடைக்கும் என  கூற முடியாது. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை விட  கூடுதலான சில விடயங்களை  இவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. தற்போதைய உலக அரசியலின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்துக்கு பல நெருக்கடிகள் ஏற்படக்கூடிய சாத்தியகூறுகள் உள்ளன. அதையும் எமக்கு சாதகமாகப் பாவித்து பல விடயங்களை அவர்களிடமிருந்து பெறலாம் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது. 

ஆர்.பி, சி.சி.என்