மாதம்பே - தொமிப்புவ வீதியில் சாதண்டிய - வலஹாபிடிய பிரதேசத்தில் 4 1/2  வயதுடைய சிறு குழந்தையொன்று லொறியில் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் தீவிர காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தன்சல் வழங்கும் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, விபத்துக்குள்ளான குழந்தை மாதம்பே வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

குறித்த தன்சலானது அக்குழந்தையின் பெற்றோரினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, குறித்த குழந்தையானது கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.