மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படத்தில் மூத்த நடிகரும், மிமிக்ரி நடிகருமான சின்னி ஜெயந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ண ரோஹந்த் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’. இந்த படத்தில் விஜயசேதுபதியுடன் மேகா ஆகாஷ், விவேக், மோகன் ராஜா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.இசைத் தொடர்பான திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த படத்தில் தற்போது லேட்டஸ்ட்டாக மூத்த நடிகரும்,, மிமிக்ரி கலைஞருமான சின்னிஜெயந்த் நடிக்கிறார். 

இதனிடையே நடிகர் சின்னிஜெயந்த் இதற்கு முன் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.