கொரோனா கணினி வைரஸ் தாக்குதல்: உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

Published By: Digital Desk 3

11 Mar, 2020 | 04:46 PM
image

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலைப் பயன்படுத்தி கணினிகளுக்கு வைரஸ் தாக்குதல் நடத்தப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. இந்த அறிவுரைகள் இ-மெயில், இணையதளம், சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப் பட்டு வருகின்றன.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலைப் பயன்படுத்தி பிரபல நிறுவனங்களை குறிவைத்து கணினி வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், தென்கொரியா, இத்தாலி, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்த கணினி வைரஸ் தாக்குதலால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன.

இதுகுறித்து சைபர் பாதுகாப்பு நிறுவனமான 'செக் பொயின்ட்' (Checkpoint) மூத்த அதிகாரிகள் கூறும்போது, “ கொவிட் ” (covid) , “ கொரோனா ” (corona) தலைப்புகளில் உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கணினி வைரஸ் கொண்ட இ-மெயில்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் மட்டும் பெரிய நிறுவனங்களை குறிவைத்து சுமார் 4,000-க்கும் மேற்பட்ட கணினி வைரஸ் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் பல நிறுவனங் களின் முக்கிய தகவல்கள் திருடப் பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணம் கேட்டு மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன. எனவே கொவிட்  , கொரோனா பெயர்களில் வரும் போலி இ-மெயில்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்" என்று தெரிவித்தனர்.

உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலைப் பயன்படுத்தி உலக சுகாதார ஸ்தாபனத்தின் பெயரில் பலருக்கு போலி இ-மெயில்கள் அனுப்பப் பட்டு வருகின்றன. இதுபோன்ற போலி இ-மெயில்கள், இணைய தளங்கள், தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள், பேக்ஸ் தகவல்களை நம்ப வேண்டாம்.

நாங்கள் யாரிடமும் கடவுச்சொல் (Password) உள்ளிட்ட எந்த விவரங்களையும் கேட்பது கிடையாது. ஏதாவது விவரம் தேவை என்றால் https://www.who.int என்ற எங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

மோசடி குறித்து பொதுமக்கள், நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போலி இமெயில்கள் குறித்து எங்களது இணையதளம் வாயிலாக புகார் தெரிவிக்கலாம். இவ்வாறுஉலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26