வெளிநாட்டு  சிகரெட்டுகள் ஒரு தொகையை டுபாயிலிருந்து இலங்கைக்கு கடத்திவர முயன்ற நபரொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குருணாகலை, மாவத்தகமையை சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இவரிடமிருந்து ரூபா 13,80,000 பெறுமதியான 27,600 சிகரெட்டுகள் அடங்கிய 138 பெட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.