புத்தளம் தம்பபண்ணி பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் தம்பபண்ணி தண்டவாள பாலத்திற்கு கீழ் எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று காணப்பட்டதை அவதானித்த அப்பகுதி மக்கள்  புத்தளம் பொலிசாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்து சென்று குறித்த சடலத்தை பார்வையிட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.