சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று வேக­மாகப் பரவி வரு­வதால் அனை­வரும் அந்த வைர­ஸி­லி­ருந்து பாது­காப்புப் பெற முக­மூ­டி­களை அணியும் நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் முக­மூ­டி­ய­ணிந்த நிலை யில் உள்­ள­வர்­களை ஆள­டை­யாளம் காண் ­ப­தற்கு உதவும் வகையில் சீன நிறு­வ­ன­மொன்று முக­மூ­டிக்குப் பின்­னா­லுள்ள முகங்­களை அடை­யாளம் காண்­ப­தற்­கான முத­லா­வது முக அடை­யாள தொழில்­நுட்­ப­மொன்றை உரு­வாக்­கி­யுள்­ளது.

சீன அதி­கா­ரிகள் கொரோனா வைரஸ்  பர­வு­வதைத் தடுக்கும் முக­மாக அந்த வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­களை கண்­கா­ணிப்­ப­தற்­கான  முக அடை­யாளம் காணும் கரு­வி­களை உள்­ள­டக்கி இலத்­தி­ர­னியல் முறை­மை­களை  பயன்­ப­டுத்தி வரு­கி­றது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்­றி­லி­ருந்து பாது­காப்புப் பெற  அனை­வரும் சத்­தி­ர­சி­கிச்­சை­களின் போது பயன்­ப­டுத்­தப்­படும் முக­மூ­டி­களை அணிந்­துள்­ளதால் முக அடை­யாளம் காண்­பது சிர­ம­மான ஒன்­றாக மாறி­யுள்­ளது.

 இந்­நி­லையில்  அந்­நாட்டின் பீஜிங் நக­ரி­லுள்ள ஹன்வொன் என அழைக்­கப்­படும் ஹன்வாங் தொழில்­நுட்ப நிறு­வனம் மக்கள் முக­மூ­டி­ய­ணிந்த நிலை­யிலும் அவர்­க­ளது முக அடை­யா­ளத்தை  தெளிவாக அடை­யாளம் காண்­ப­தற்­கான தொழில்­நுட்ப முறை­மை­யொன்றை உரு­வாக்­கி­யுள்­ளது. 

அந்த நிறு­வ­னத்தைச் சேர்ந்த 20 தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்­களைக்  கொண்ட குழு  சுமார் 6 மில்­லியன் மக்­களின் முக­மூ­டி­ய­ணி­யாத முகங்கள் தொடர்பாக பெறப் பட்ட தரவுகளை அடிப்படையாக வைத்து அவர்கள் முகமூடியணிந்துள்ள போதும் அவர்களை அடையாளம் காண உதவும் தொழில்நுட்பத்தை விருத்தி செய்துள்ளது.