கொரோனா வைரஸ் தாக்கம் கார­ண­மாக உலகில் பல நாடு­களின் பங்குச்சந்­தை­க­ளிலும் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

அத­ன­டிப்­ப­டையில் நேற்று கொழும்பு பங்குச் சந்­தையில் அனைத்து பங்­கு­களின் மொத்த விலை சுட்டெண் வர­லாறு காணாத அளவு பாரிய வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

அதற்­க­மைய அனைத்து பங்­கு­களின் மொத்த விலைச் சுட்டெண் 221.24 புள்­ளி­களால் குறை­வ­டைந்து 5121.91 ஆக வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

வர­லாற்றில் ஒரு நாளில் மொத்த விலைச் சுட்­டெண்ணில் 300.59 புள்­ளிகள் குறை­வ­டைந்­தமை வர­லா­று­கா­ணாத வீழ்ச்சியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.