(எம்.ஆர்.எம்.வஸீம்)

சிறு­பான்மை இனத்­த­வர்கள் எவ­ரையும் வேட்­பு­ம­னுவில் இணைத்­துக்­கொள்­ளாமல், அர­சாங்கம் தனி சிங்­கள வாக்­கு­களை மாத்­திரம் பெற்­றுக்­கொள்ளும் பிர­சா­ரத்தை மேற்­கொள்ள திட்­ட­மிட்டு வரு­கின்­றது என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி தெரி­வித்தார்.

தேசிய ஐக்­கிய முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

எதிர்­வரும் தேர்­தலில் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பு­ம­னுவில் தமிழ், முஸ்லிம் வேட்­பா­ளர்கள் எவ­ரையும் நிய­மிக்­காமல் இருக்க நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்­றது. அவர்கள் தேர்­தலில் தனித்து போட்­டி­யிட்டு, வெற்­றி­பெற்­றதன் பின்னர் அர­சாங்­கத்தில் இணைத்­துக்­கொள்ள இருக்­கின்­றது. அர­சாங்­கத்தின் இந்த திட்­ட­மா­னது, தேர்தல் பிர­சா­ரத்தில் சிங்­கள மக்கள் மத்­தியில் இன­வாத அடிப்­ப­டையில் வாக்­குளை பெற்­றுக்­கொள்ளும் நட­வ­டிக்­கை­யாகும்.

 பொதுத் தேர்­தலில் எப்­ப­டி­யா­வது மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பெற்­றுக்­கொள்ளும் முயற்­சியில் அர­சாங்கம் ஈடு­பட்டு வரு­கின்­றது. இந்­நி­லையில் அர­சாங்­கத்தின் சார்பில் தமிழ், முஸ்லிம் வேட்­பா­ளர்­களை நிய­மிக்­காமல், சிங்­கள மக்கள் மத்­தியில் இதனை பிர­சாரம் செய்து, தனிச்­சிங்­கள வாக்­கு­களை பெற்­றுக்­கொள்­ளவும் தேர்­த­லுக்கு பின்னர் இதனை காரணம் காட்டி சிறு­பான்மை மக்­களை அடக்­கு­வ­தற்­குமே அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது.  அர­சாங்­கத்தின் தற்­போ­தைய  நட­வ­டிக்­கை­களை பார்க்­கும்­போதும் சிறு­பான்மை மக்­களை கண்­டு­கொள்­ளாத வகை­யிலே இருக்­கின்­றன. குறிப்­பாக வெளி­நா­டு­களில் இருந்து வரும் பய­ணி­க­ளுக்கு கொராேனா வைரஸ் தொற்று இருப்­பதா என பரீட்­சித்து பார்க்க தெற்கில் அர­சாங்க கட்­டி­டங்­களை ஒதுக்­கும்­போது அதற்கு சிங்­கள மக்கள் எதிர்ப்பு தெரி­விக்­கின்­றார்கள் என்­ப­தற்­காக, சிறு­பான்மை மக்கள் இருக்கும் மட்­டக்­க­ளப்பு தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்தை பலாத்­கா­ர­மாக கைப்­பற்றி, பயன்­ப­டுத்தி வரு­கின்­றது என்றார்.