ஆசிரியரின் தாலிக்கொடி, சங்கிலியை அறுத்துச் சென்ற கொள்ளையர்கள்  ; யாழில் சம்பவம்

Published By: Digital Desk 4

11 Mar, 2020 | 10:14 AM
image

பாடசாலை முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆசிரியரின் தாலிக்கொடி மற்றும் சங்கிலி என்பவற்றை பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர். 

திருநெல்வேலி பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர் நாவற்குழி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்து வருகின்றார். நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழமை போன்று பாடசாலை முடித்து , திருநெல்வேலியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்கள் ஆசிரியரை வழிமறித்து தாலிக்கொடி மற்றும் சங்கிலி என்பவற்றை அறுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இதேவேளை நல்லூர் - செம்மணி வீதியில் மதியம் மற்றும் இரவு நேரங்களில் வீதியில் ஆள்நடமாட்டம் குறைவாக காணப்படும் வேளைகளில் வீதியில் பயணிப்போரிடம் அப்பகுதியில் நடமாடும் வழிப்பறி கொள்ளையர்கள் , வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் பலரும் பொலிசாருக்கு அறிவித்த நிலையிலும் , பொலிசாரால் வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்ய முடியவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள்...

2023-12-10 16:01:28
news-image

உடுப்பிட்டி மதுபானசாலைக்கு எதிராக தொடர் நடவடிக்கையில்...

2023-12-10 15:15:38
news-image

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு...

2023-12-10 16:21:45
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2023-12-10 14:57:43
news-image

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் பாடசாலை ஆசிரியர்,...

2023-12-10 14:47:20
news-image

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர...

2023-12-10 13:50:58
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

2024 வரவு செலவுத் திட்டம், சர்வதேச...

2023-12-10 13:59:28
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

திரிபோஷா, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு...

2023-12-10 12:54:32