புத்தளம் பாலாவியிலிருந்து கல்லடி சென்ற மோட்டார் சைக்கிள் பாலாவி விமானப்படை முகாமிற்கு முன்பாக டிப்பர் லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  

நேற்று மாலை கல்லடியிலிருந்து பாலாவி நோக்கிச் சென்ற டிப்பர் லொறியுடன் பாலாவியிலிருந்து கல்லடி சென்ற மோட்டார் சைக்கிள்  நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்நிலையில் விபத்துக்குள்ளானவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அட்டவில்லுப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் டிப்பர் லொறியின் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.