மஹிந்த செல்வந்தர்களுக்கான வரிகளை நீக்கினார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செல்வந்தர்களுக்கான வரியை அதிகரித்து சாதாரணமான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுக்கின்றார். "வற்வரி"யானது தற்காலிகமானது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரும், பொதுச் செயலாளருமான கபீர் ஹாசீம் குறிப்பிட்டார். 

சுதந்திரக் கட்சி அழிந்தாலும் தனது குடும்பம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே மஹிந்தவின் சிந்தனையாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.