மட்டு கொரேனா தடுப்பு முகாமிற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டு வைத்தியசாலைக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

10 Mar, 2020 | 04:59 PM
image

 வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு நிலைய தடுப்பு முகாமிற்கு கொண்டுவரப்படவுள்ளதற்கு   எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது 

அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றினைந்து இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இதனையடுத்து மாலை 3 மணிக்கு மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக நூறுக்கும் மேற்பட்ட பொதுக்கள் ஒன்றினைந்தனர்.  

இதனையடுத்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் கொவி 19 கோரோனா பரிசோதனை வேண்டாம், அரசே சிகிச்சைக்காக மக்கள் நடமாட்டமற்ற பிரதேசத்தை தெரிவு செய், மட்டு வைத்தியசாலை பொது மக்களுக்கானது , தனியான தனிமைப்படுத்தும் வைத்தியசாலையை ஏற்பாடு செய், நீங்கள் எங்களை வேறுபடுத்துகின்றீர்களா, கொரோனாவை எமக்கு தினிக்க வேண்டாம், என பவ்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு 

குறித்த போராட்டம் ஊர்வலமாக வைத்தியசாலை வீதி வழியாக வைத்தியசாலைக்கு முன்பு வந்தடைந்து வைத்தியசாலைக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை பிரதேசத்தில் இந்த தடுப்பு முகாமிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.  இதேவேளை ஹர்த்தால் மட்டு காந்தி பூங்காவிற்கு முன் ஆர்ப்பாட்டத்திற்கு  அழைப்பு விடுக்கப்பட்டது.

ஹர்த்தால் இடம்பெறாதாத போதும் காந்தி பூங்காவிற்கு முன்னால். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், சீ. யோகேஸ்வரன், ஜெயானந்தமூர்த்தி மட்டு மாநகர முதல்வர் உட்பட அரசியல் வாதிகள் வந்தடைந்தபோதும் ஆர்ப்பாடத்திற்கு பொது மக்கள் வராததையடுத்து ஆர்ப்பாட்டம்  இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரீட்' படத்தின்...

2026-02-12 14:37:56
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:06:20
news-image

பிலியந்தலையில் விசேட சோதனை ; போதைப்பொருள்...

2026-02-12 14:05:59
news-image

கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலுக்கு எதிராக...

2026-02-12 13:42:36
news-image

மாத்தளையில் விரைவில் குரங்குகளுக்கான சரணாலயம்!

2026-02-12 13:18:11
news-image

குப்பை போடுபவர்களுக்கு எதிராக நல்லூர் பிரதேச...

2026-02-12 14:18:25
news-image

பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சிறுவனின்...

2026-02-12 14:16:14
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-02-12 12:46:27
news-image

கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

2026-02-12 12:38:44
news-image

கொழும்பில் பாடசாலையின் மதில் இடிந்து விழுந்ததில்...

2026-02-12 12:36:46
news-image

வடக்கில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு...

2026-02-12 12:26:50
news-image

அல்லைப்பிட்டி சம்பவம் ; உயிரிழந்த சிறுவன்...

2026-02-12 12:06:36