அரங்­கேற்­றப்­படும் அர­சியல் சூழ்ச்சி

Published By: J.G.Stephan

10 Mar, 2020 | 04:06 PM
image

பாரா­ளு­மன்றத் தேர்தல் எதிர்­வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இந்­நி­லையில் முஸ்லிம் அர­சியல் கட்சி­களும் அர­சி­யல்­வா­தி­களும் அர­சியல் செயற்­பாட்­டா­ளர்­களும் முஸ்­லிம்­களின் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தைப் பாது­காத்துக் கொள்ள வேண்­டு­மென்ற கருத்­துக்களை முன்வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­களில் இன்­னு­மொரு  சாரார் பொது­ஜன பெர­மு­னவின் தலை­மை­யி­லான ஆட்­சியை நிறுவ வேண்டும். அதுவே முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்­பா­னது  என்று அறிக்­கை­களை விடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இத­னி­டையே பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுடன் சிறு­பான்மைக் கட்­சி­களும் சிறு கட்­சி­களும் உடன்­ப­டிக்­கை­களை செய்து இணைந்து கொண்­டி­ருக்­கின்­றன. பாரா­ளு ­மன்றத் தேர்­த­லுக்­காக நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் அத்­தனை சம்­ப­வங்­களின் பின்­னாலும் சுய­நல அர­சியலே காணப்­ப­டு­கின்­றது. நாட்டு நலன், சமூக நலன் என்­பது இரண்டாம் நிலை­யி­லேயே இருக்­கின்­றன.

பேரி­ன­வாதக் கட்­சிகள்

தேர்தல் காலங்­களில் பேரி­ன­வாதக் கட்­சிகள் நாட்டு நலன், பௌத்த மதம், பௌத்த நாடு, நாட்டின் பாது­காப்பு, ஊழல் ஒழிப்பு போன்ற சொற் பிர­யோ­கங்­களின் மூல­மா­கவே பெரும்­பான்மை மக்­களின் வாக்­கு­களை பெற்று வந்­துள்­ளன. தேர்தல் முடிந்­ததும் இக் ­க­ருத்­தா­டல்கள் யாவும் கைவி­டப்­படும். ஆனால், இக்­க­ருத்­தா­டல்­களின் மூல­மாக உரு­வாக்­கப்­பட்ட இன­வாதம் மட்டும் தொடர்ந்தும் பேசப்­பட்டுக் கொண்டிருக்கும்.

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பேரி­ன­வாதக் கட்­சி­களின் அர­சியல் தலை­வர்கள் பெரும்­பான்மை மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக பல்­வேறு வகையில் பிர­சா­ரங்­களை மேற்­கொள்­வார்கள். அவை­களில் இன­வாதக் கருத்­து­களே முன்­னிலை வகிக்கும். சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­க­ளுக்கு எதி­ராக கருத்­து­களை முன் வைக்கும் கட்­சிக்கும் வேட்­பா­ள­ருக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்கள் வாக்­க­ளிக்கும் சூழலை பேரி­ன­வாதக் கட்­சிகள் உரு­வாக்­கி­யுள்­ளன.

பேரி­ன­வாதக் கட்­சிகள் இவ்­வாறு செயற்­பட்டுக் கொண்­டாலும் அவற்றின் நட­வ­டிக்­கைகள் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக இருந்­தாலும் அக்­கட்­சி­களின் பின்னால் அணி திரள்­வ­தற்கும் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கும் சிறு­பான்­மை­யினக் கட்­சி­களும் தலை­வர்­களும் வாக்­கா­ளர்­களும் தயாராகவே னஉள்ளனர். பேரி­ன­வாதக் கட்­சி­களின் முக­வர்­க­ளாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் தமிழ், முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் தமிழ், முஸ்லிம் கட்­சி­களை இன­வாதக் கட்­சிகள் என்று தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­களின் ஊனக் கண்­க­ளுக்கு பேரி­ன­வாதக் கட்­சி­களின் இன­வாத நட­வ­டிக்­கைகள் தெரிவதில்லை.

அதேவேளை, தமிழ், முஸ்லிம் கட்­சிகள் இத்­த­கைய பேரி­ன­வாதக் கட்சி­க­ளுடன் உடன்­ப­டிக்கை செய்து கொண்டு, அக்­கட்­சி­களை புகழ்ந்து கொண்­டி­ருப்­ப­த­னையும் பார்க்­கின்றோம். சிறு­பான்மைக் கட்­சிகள் தமது இனத்தின் சுயத்தை தமது சுய­நல அர­சி­ய­லுக்­காக பேரம் பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். உடன்­ப­டிக்­கைகள் என்ற மாயையை காட்டி மக்­களை ஏமாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். சிறு­பான்மைக் கட்­சிகள் என்­ன தான் பல உடன்­ப­டிக்­கை­களை செய்து கொண்­டாலும் அந்த உடன்­படிக்­கை­களின் மூல­மாக சமூ­கத்­துக்கு எத­னையும் சாதித்துக் காட்­ட­வில்லை. சமூ­கத்தின் உரி­மை­களை இழந்து கொண்­டி­ருக்கும் நிலையே தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளன.

சிறு­பான்­மை­யி­னரின் முதுகில் சிறு­பான்மைக் கட்­சி­களின் உத­வி­யுடன் சவாரி செய்து கொண்­டி­ருந்த பேரி­ன­வாத அர­சியல் கட்­சிகள் பிள­வு­பட்டுக் கொண்­டி­ருப்­ப­த­னையும் பார்க்­கின்றோம். 2015ஆம் ஆண்டு தேர்­தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இரண்­டாக பிள­வு­பட்­டுள்­ளது. இன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மிகவும் பல­வீ­ன­மான நிலையில் இருக்­கின்­றது. அதே­வேளை, அக்­கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து அமைக்கப்­பட்ட பொது­ஜன பெர­முன மிகவும் பல­மான நிலையில் இருக்கிறது. அக்­கட்சி ஜனா­தி­பதி ஒரு­வரை பெற்றுக் கொள்ளும் அள­வுக்கு குறு­கிய காலத்தில் வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

தற்­போது ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டு­க­ளினால் அக்­கட்­சியும் பிள­வு­படும் நிலையில் இருக்­கின்­றது. ஐக்­கிய மக்கள் சக்தி எனும் கூட்­ட­மைப்­புக்கு சஜித் பிரே­ம­தாஸ தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் யானைச் சின்­னத்தில் போட்­டி­யிட முடி­யா­தென்று ஐக்­கிய மக்கள் சக்­தி­யினர் தெரி­வித்துக் கொள்ளும் அள­வுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் முரண்­பா­டுகள் வளர்ந்துள்ளன. அக்­கட்­சியில் உள்ள பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையை ஏற்றுக்கொள்ள மறுக்­கின்­றார்கள். இதனால், ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் பிள­வுகள் ஏற்­பட்டு, இரு அணி­க­ளாக தேர்­தலை சந்­திக்கும் சூழ­லொன்று ஏற்­ப­டு­வ­தற்கும் வாய்ப்­புகள் உள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் பிளவு ஏற்­ப­டு­மாயின் அதனால், ஐக்­கிய மக்கள் சக்தியில் உள்ள சிறு­பான்­மை­யின கட்சி­க­ளுக்கும் பாதிப்­புகள் ஏற்­படும். குறிப்­பாக முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தில் பாதிப்பை ஏற்­படுத்தும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சிறு­பான்­மை­யினக் கட்­சிகள்

பொது­வாக பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களின் போது அநே­க­மான சிறு­பான்மைக் கட்­சிகள் பேரி­ன­வாதக் கட்­சி­க­ளுடன் இணைந்தே போட்­டி­யிட்டுள்ளன. இரு தரப்­பி­னரும் தங்­களின் வெற்­றியை உறுதி செய்து கொள்­வ­தற்­கா­கவே இணைந்து செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அந்த வகையில் முஸ்லிம் கட்­சி­களும் மலை­யகக் கட்­சி­களும் பேரி­ன­ வாதக் கட்­சி­க­ளுடன் இணைந்­துள்­ளன.

முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், மனோ கணேசன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஆகிய கட்­சிகள் ஐக்­கிய மக்கள் சக்தி எனும் கூட்­ட­மைப்பில் இணைந்­துள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சியை பிர­தான கட்­சி­யாகக் கொண்டு உரு­வாக்­கப்­பட்­டுள்ள  ஐக்­கிய மக்கள் சக்­தியின் தலை­வ­ராக சஜித் பிரே­ம­தாஸ நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். ஆயினும், ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் காணப்­படும் முரண்­பா­டுகள் ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பை முன்­னெ­டுத்து செல்­வதில் சிக்­கல்கள் ஏற்­பட்­டுள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அணி­யினர் ஐக்­கிய மக்கள் சக்தி யானைச் சின்­னத்­தி­லேயே போட்­டி­யிட வேண்­டு­மென்று தெரி­விக்கின்றன. இதற்கு சஜித் பிரே­ம­தாஸ தலை­மை­யி­லான அணி­யினர் மறுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த முரண்­பாட்டை தீர்ப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட முயற்­சிகள் யாவும் தோல்­வியில் முடிந்­துள்­ளன. இதனால், ஐக்­கிய தேசியக் கட்சி இரண்­டாக பிள­வு­பட்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலை எதிர்­கொள்ளக் கூடிய நிலையும் ஏற்­ப­டலாம்.

ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் பிளவு ஏற்­ப­டு­மாயின், அது ஐக்­கிய மக்கள் சக்­தியில் இணைந்­துள்ள சிறு­பான்மைக் கட்­சி­களை அதிகம் பாதிக்கச் செய்யும். சிறு­பான்மை மக்­க­ளி­டையே உள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­களின் வாக்­கு­களின் மூல­மாக ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் தேர்தல் கூட்டு வைத்­துள்ள சிறு­பான்மைக் கட்­சிகள் நன்­மை­களை அடைந்­துள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்சி பிள­வு­படும் போது, அதன் வாக்­கு­களும் பிள­வு­படும். இதனால் முஸ்லிம் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு கூட்­டணி, மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் பெற்றுக் கொள்ளும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கை­யிலும் ஐக்­கிய தேசியக் கட்சி பெற்றுக் கொள்ளும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கை­யிலும் ஐக்­கிய மக்கள் சக்தி பெற்றுக் கொள்ளும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கை­யிலும் வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்தும். ஆகவே, ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் பிளவு ஏற்­படும் போது அதனால் பொது­ஜன பெர­முன கட்­சியே அதிக நன்­மை­களைப் பெற்றுக் கொள்ளும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, பொது­ஜன பெர­முன தம்­மோடு இணைந்­துள்ள சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்கு எவ்­வாறு வேட்­பாளர் ஒதுக்­கீட்டை செய்­ய­வுள்­ளது என்­பதில் பல்­வே­று­பட்ட கருத்­துகள் முன்­வைக்கப் ­பட்­டுள்­ளன. குறிப்­பாக பொது­ஜன பெர­முன முஸ்லிம் வேட்­பா­ளர்­களை நிறுத்­து­வதில் தயக்­கத்தைக் காட்டிக் கொண்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் வேட்­பா­ளர்­களை நிறுத்தும் போது சிங்­கள மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வதில் சிக்­கல்கள் ஏற்­ப­ட­லா­மென்று அக்­கட்­சி­யினர் கரு­து­கின்­றனர். இதனால் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தவிர்ந்த ஏனைய மாகா­ணங்­களில் ஒரு சில முஸ்லிம் வேட்­பா­ளர்­களை நிறுத்­து­வ­தற்கு பொது­ஜன பெர­முன திட்­ட­மிட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

இதே­வேளை, பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்­துள்ள முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா­வுல்­லாவை தனித்து தேசிய காங்­கி­ரஸில் போட்­டி­யி­டு­மாறு கேட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதே­வேளை, பொது­ஜன பெர­மு­னவின் மறை­முக ஆத­ர­வா­ள­ராக ஜனா­தி­பதித் தேர்தல் முதல் தற்­போது வரை செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பொது­ஜன பெர­மு­னவின் மொட்டுச் சின்­னத்தில் போட்­டி­யிட நாட்டம் கொண்­டி­ருந்தார். ஆயினும், அவ­ருக்கும் போட்­டி­யி­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் மறுக்­கப்­படும் நிலையே உள்­ளது. இதனால், காத்­தான்­கு­டியில் உள்ள அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களை ஒற்­று­மைப்­படுத்தி ஹிஸ்­புல்­லாஹ்வை சுயேச்­சையில் அல்­லது வேறு ஒரு கட்­சியில் போட்­டி­யி­டு­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கை­களை அங்­குள்ள ஒரு சில சமூக அமைப்­புகள் மேற்­கொண்டு வரு­கின்­றன.

முஸ்லிம் வேட்­பா­ளர்­களை வடக்கு, கிழக்கில் நிறுத்­தினால் பௌத்த இன­வாத அமைப்­பு­களின் ஆத­ரவைப் பெற்றுக் கொள்ள முடி­யாது போய்­விடும். அந்த அமைப்­பு­களின் ஆத­ரவு மாற்று அணிக்கு சென்று விட்டால் பாரா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ள முடி­யாது போய்­விடும் என்­ப­த­னா­லேயே பொது­ஜன பெர­முன இத்­த­கை­ய­தொரு முடி­வுக்கு வந்­துள்­ளது. ஆகவே, பேரி­ன­வாதக் கட்­சி­க­ளுடன் இணைந்­துள்ள சிறு­பான்மைக் கட்­சிகள் ஆப்பு இழுத்த குரங்கின் நிலையில் இருந்து கொண்­டி­ருக்­கின்­றன.

முஸ்லிம் கட்­சிகள்

ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் ஏற்­படும் பிளவு முஸ்லிம் காங்­கி­ர­ஸையும் மக்கள் காங்­கி­ர­ஸையும் அதிகம் பாதிக்கச் செய்யும். அம்­பாறை மாவட்­டத்­திலும் கண்டி மாவட்­டத்­திலும் வேறு சில மாவட்­டங்­க­ளிலும் முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் மக்கள் காங்­கிரஸ் ஆகி­யன ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிட்டே கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஆச­னங்­களைப் பெற்றுக் கொண்­டன.

முஸ்லிம் காங்­கிரஸ் அம்­பாறை மாவட்­டத்தில் தனித்துப் போட்­டி­யிட்டால் மூன்று ஆச­னங்­களைப் பெற்றுக் கொள்ள முடி­யாது. ஒரு ஆச­னத்­தையே பெற்றுக் கொள்ள முடியும். ஐக்­கிய தேசியக் கட்சி பிள­வு­பட்ட நிலையில் முஸ்லிம் காங்­கிரஸ் ஐக்­கிய மக்கள் சக்தி எனும் கூட்­ட­மைப்பில் போட்டி­யிட்­டாலும் ஒரு ஆச­னத்­தையே பெற்றுக் கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும். அம்­பாறை தொகு­தியில் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பாளர் சஜித் சுமார் 41 ஆயிரம் வாக்­கு­க­ளையே பெற்றுக் கொண்டார். ஐக்­கிய தேசியக் கட்சி பிள­வு­படும் போது இந்த வாக்­கு­களும் பிள­வு­படும். கடந்த உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் முஸ்லிம் காங்­கிரஸ் பின்­ன­டை­வு­களைக் கண்­டுள்­ளன. அதே­வேளை முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ர­வா­ளர்கள் பாரா­ளு­மன்­றத்­துக்கு புது­மு­கங்­களை அனுப்ப வேண்­டு­மென்று தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இத­னையும் கருத்திற் கொண்­டுதான் வேட்­பா­ளர்­களை நிறுத்த வேண்­டி­யுள்­ளது. இதே­வேளை, மக்கள் காங்­கிரஸ் அம்­பாறை மாவட்­டத்தில் தனித்து போட்­டி­யிட இருப்­ப­தாக அக்­கட்­சியின் வட்­டா­ரங்கள் தெரி­விக்­­கின்­றன.

இதே­வேளை, எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முஸ்லிம் கட்­சிகள் ஒற்­று­மைப்­பட்டு செயற்­பட வேண்­டு­ மென்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. முஸ்லிம் கட்­சி­களின் ஒற்­றுமை குறித்து முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கும் மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கும் இடையே பேச்­சு­வார்த்தை ஒன்று நடை­பெற்­றுள்­ளது. ஆயினும் எந்­த­வொரு முடிவும் எடுக்­கப்­ப­ட­வில்லை. முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லா­ளரும் ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்பின் செய­லா­ள­ரு­மான எம்.ரி.ஹசன்­அ­லிக்கும் ரவூப் ஹக்­கீ­முக்கும் இடை­யேயும் ஒரு பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றுள்­ளது. இதிலும் ஒரு முடிவும் எட்­டப்­ப­ட­வில்லை. முஸ்லிம் காங்­கி­ரஸில் ஹசன்­அ­லியை மீண்டும் இணைந்து கொள்­ளு­மாறும் கட்­சியின் யாப்பில் ஹசன்­அ­லி­யினால் வேண்­டப்­படும் திருத்­தத்­தினை செய்­வ­தற்கு தயா­ராக இருப்­ப­தா­கவும் ரவூப் ஹக்கீம் தெரி­வித்­த­தா­கவும் தக­வல்கள் கூறு­கின்­றன.

இவ்­வாறு முஸ்லிம் கட்­சி­களை ஒற்­று­மைப்­ப­டுத்த வேண்­டு­மென்ற முயற்­சிகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்­தாலும், இதன் பின்­ன­ணியில் முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­காலம் குறித்­தான சிந்­தனை இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. முஸ்லிம் சமூ­கத்தின் பேரால் சமூ­கத்தின் சுயத்தை தொலைத்­துள்ள முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள், தற்­போது தங்­க­ளுக்கும் கட்­சிக்கும் ஏற்­பட்­டுள்ள பின்­ன­டை­வினை சரி செய்து கொள்­வ­தற்­காக ஒற்­றுமை பற்றி பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நிதி­களின் எண்­ணிக்­கையை பாது­காத்துக் கொள்ள வேண்­டு­மென்று சமூக உணர்­வை­யூட்டி சமூ­கத்தின் முக­வ­ரியை அழித்­த­வர்­களை மீண்டும் பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்­பு­வ­தற்­கா­கவே ஒற்­றுமை எனும் பெயரில் அர­சியல் சூழ்ச்­சியை அரங்­கேற்ற முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் நட­வ­டிக்­கை­களை எடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பேரி­ன­வாதக் கட்­சி­களும் பௌத்த இன­வா­தி­களும் முஸ்­லிம்கள் நாட்டு பற்­றில்­லா­த­வர்கள், மத்­ர­ஸாக்­களை மூட வேண்டும். அங்கு அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­ப­டு­கின்­றது. முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்­களின் எண்­ணிக்­கையை குறைக்க வேண்­டு­மென்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கருத்­து­களை முன்வைத்து அர­சியல் வெற்­றிக்­காக சூழ்ச்சி செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் ஒற்­றுமை எனும் கோஷத்தை கையில் எடுத்து தமது கட்­சி­யி­னதும் வேட்பாளர்களினதும் சுயத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்துகள் கிடையாது. ஆனால், அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் அனைவரும் ஓர் அணியில் ஒற்றுமைப்பட வேண்டுமென்று முயற்சிகளை எடுப்பது சமூகத்தின் இருப்புக்கு சிறந்த முடிவாக இருக்காது. முஸ்லிம்கள் எல்லா பேரினவாதக் கட்சிகளிலும் உள்ளார்கள். ஆயினும், பேரினவாதக் கட்சிகள் முஸ்லிம்களை பணயம் வைத்தே அரசியல் செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், முஸ்லிம்கள் ஓர் அணியில் ஒற்றுமைப்படும் போது பௌத்த இனவாதிகளின் இனவாதப் பிரசாரத்துக்கு உரம் சேர்ப்பதாக அமையும். இதனை கருத்திற் கொள்ளாது முஸ்லிம் அரசியல் கட்சிகளின் சுயநலன்களுக்கு முஸ்லிம்கள் துணையாக செயற்பட முடியாது.

கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்ட போதும், கட்சியின் யாப்பு குறித்து முரண்பாடுகள் ஏற்பட்ட போதும் கட்சியின் தலைமை தமக்கு ஏற்றால் போன்று யாப்பை திருத்தி அமைத்துக் கொண்டது. இதற்கு உயர்பீடமும் அங்கீகாரம் கொடுத்தது. ஆனால், இன்று யாப்பில் மாற்றம் செய்யவும் தயார் நிலையில் இருக்கின்றோம். கட்சியை விட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் வந்து சேருங்கள் என்று அழைப்புவிடுப்பதில் எத்தனை தூய்மை இருக்குமென்று நம்ப முடியாது. ஆகவே, பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் கட்சிகள் யாவும் தமது வெற்றி வாய்ப்புகள் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. வெற்றி வாய்ப்பை அதிகரித்துக் கொள்வதற்கு என்ன சூழ்ச்சி செய்து கொள்ளலாமென்று மட்டுமே பேசிக் கொள்கின்றார்கள். இதில் நாட்டின் நலன், சமூக நலன் என்று எதுவுமில்லை.

சஹாப்தீன் -

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04