கால் பெருவிரலில் இருக்கும் நகங்களின் வளர்ச்சியில் சீரற்ற தன்மை ஏற்படுவதால் நிகழும் பாதிப்பிற்கு தற்போது நவீன சத்திரசிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டு, பலனளித்து வருகிறது.

இன்றைய திகதியில் பாடசாலை செல்லும் மாணவ மாணவிகளுக்கு காலணி அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் பிரத்யேக உறையணிந்து அதன்மேல் காலணியை அணிந்து செல்லும் பொழுது, அவர்களின் பெருவிரலிலும், அதன் நகங்களும் பாரிய அளவில் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக அங்கு வலி ஏற்படுகிறது. அத்துடன் காலணி அணிந்து கொள்ளும் பொழுது ஒரு அசௌகரியமான சூழலும் உண்டாகிறது. இதனால் மனதளவில் அயர்ச்சி ஏற்படுகிறது.

இதற்கு தோல் மருத்துவ சிகிச்சை நிபுணர்களிடம் சிகிச்சை பெற வேண்டும். அவர்கள் கால் பெருவிரலில் நகங்களின் வளர்ச்சியை,அதறனை மூலம் அவதானிப்பர். 

அதன் பிறகு நகங்களின் சீரற்ற வளர்ச்சியால் தோல் பாதிக்கப்பட்டு இருக்கிறதா? அல்லது எலும்புகளின் அமைப்பிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதையும் கண்டறிவார்கள். அதன் பிறகு அதற்குரிய சத்திரசிகிச்சை செய்து, நகங்களின் வளர்ச்சியை சீராக்கி, கால் பெரு விரலில் ஏற்படும் வலியை குறைப்பார்கள்.

டொக்டர் தீப்தி.

தொகுப்பு அனுஷா.