தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ரணில் கடந்த வருடமே ஏமாற்றி விட்டார் ; சிவஞானம் 

Published By: Digital Desk 4

10 Mar, 2020 | 03:40 PM
image

ஐ. தே க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே ஏமாற்றி விட்டார்.அதுவரை நாம் ஐ.தே.காவை நம்பியது உண்மைதான் என தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ரணில் எம்மை நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான் அதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஏமாற்றி விட்டார் என்று எமக்கு தெரிய வந்துவிட்டது.அதுவரை நாம் ஐ.தே.காவை நம்பியது உண்மைதான்.ரணில் எம்மை நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான்.

அதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.ஒ்கடோபர் அரசியலமைப்பு அறிக்கை பாராளுமனறத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது குழப்பம் வந்த போது  இதற்கு நான் பொறுப்பில்லை சபையே பொறுப்பு என கூறியிருந்தார்.அதில் இருந்து அவர் எம்மை ஏமாற்றி விட்டார் என நாம் அறிந்து கொண்டோம்.எனினும் நாம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் மகிந்த குடும்பத்தின் ஆட்சிக்கு மீண்டும் வந்து விடக் கூடாது என்றே தொடர்ந்தும் ஆதரவு கொடுத்தோம்.

இனிவரும் காலங்களில் ஐ.தே.காவுக்கு ஆதரவான பாராளுமனற பிரதிநிதிகள் இருக்க மாட்டார்கள்.நாம் பட்டு தெளிந்து விட்டோம்.நாம் அனைவருடனும் பேசுவோம் அதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு தான் ஆதரவு வழங்குவோம் என்று இல்லை.இனி நிபந்தையுடனேயே இறுக்கமான முறையில் நாம் அணுகுவோம்.ஏற்கனவே நாம் அனுபவப் பட்டுவிட்டோம்.

மேலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அண்மைக்காலமாக இந்த நாட்டில் இனப் பிரச்சனை என்று ஒன்று இல்லை என்று அது பொருளாதார ரீதியான பிரச்சனையே என கூறிவருகின்றார்.அவருடைய கருத்து தவறானது.இந்த நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னர் அல்லது அதற்கு முன்னரும் கூட இங்கு வாழும் தமிழ் மக்களின் தனித்துவ தன்மை பேணப் படவேண்டும்.எமது இனம் சார்ந்த பிரச்சனைகள் இருந்தன.இப்போதும் இருக்கின்றது.

எமது தமிழ் இனம் மத,மொழி,ரீதியாக தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நாட்டில் இனப் பிரச்சனை உள்ளது என்பதை கடந்த கால அரசுகள் ஏற்றுள்ளனர்.கடந்த ஆட்சியில் கூட இனப் பிரச்சனைக்கான தீர்வில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் வழிகாட்டல் குழுவில் கோத்தாபயவின் தரப்பினரும் இருந்தனர்.

தமிழர்களுக்கு இனப் பிரச்சனை இல்லை என்றால் ஏன் பங்குபற்றினீர்கள் எனவே எமது இனப்பிரச்சனையை தட்டிக்கழிக்க முடியாது.அரசுக்கு அதனை தீர்க்கும் கடமை இருக்கின்றது.பொறுப்புக் கூறலில் இருந்து விலக முடியாது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ காணாமல் போனவர்களை சுட்டுக்கொல்லவில்லை என்று கூறியுள்ளார்.நாம் காணாமல் போனவர்களை சுட்டுக் கொன்கிறீர்கள் என சொல்லவில்லை.நாம் இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் உறவுகளினால் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது?அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்றே கோரி வருகின்றோம்.எனவே அதனை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:21:56
news-image

யானைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட நபரை மீட்ட வன...

2025-03-19 15:38:12
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கும் ஜேர்மனிய...

2025-03-19 15:01:24
news-image

இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர் சங்க...

2025-03-19 15:45:12
news-image

25 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை...

2025-03-19 14:27:13
news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:15:59
news-image

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

2025-03-19 14:24:30
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 14:17:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்!

2025-03-19 14:17:50
news-image

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

2025-03-19 13:18:12