ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘பூமி ’படத்தின் டீஸர் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

‘கோமாளி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம்‘ பூமி’. இப்படத்தில் ஜெயம் ரவியுடன் கன்னட நடிகை நிதி அகர்வால் ஜோடியாக அறிமுகமாகிறார்.

இவர்களுடன் சதீஷ்,தம்பி ராமையா, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டட்லீ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டிஇமான் இசையமைத்திருக்கிறார். 

ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் லட்சுமண் இயக்கியிருக்கும் இப்படம் ஜெயம்ரவியின் 25வது படம் என்பது விசேட அம்சம். அதனால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. வெளியானதும் இணையத்தில் வைரலாகியிருக்கிறது.  

விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளின் நிலையைப் பற்றியும் பேசியிருக்கும் இத்திரைப்படத்தின் டீஸர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பூமி மே மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.