மீண்டும் ஒரு தடவை தேர்தல் நேரம் வந்­தி­ருக்­கி­றது. நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பத­வியை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தின் மூலம் உறு­தி­யான ஒரு அர­சாங்­கத்தை நிறுவும் நோக்­கத்­துக்காக பாரா­ளு­மன்­றத்தின் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பெறு­வதில் ஜனா­தி­ப­தியின் கட்சி நாட்டம் கொண்­டி­ருக்­கின்­றது.அர­சாங்­கத்தின் அதி­கா­ரங்­களை மட்­டுப்­ப­டுத்­து­வதன் மூலம் பிர­ஜை­களின் உரி­மை­களை உத்­த­ர­வாதம் செய்யும் ஒரு ஆவ­ணமே  அர­சி­ய­ல­மைப்பு ஆகும். சகல வல்­ல­மையும் பொருந்­திய முடி­யாட்­சி­யி­ட­மி­ருந்து பொது­மக்கள் அதி­கா­ரத்தை பறித்­துக்­கொள்­வ­தற்­காக நடத்­திய பல நூற்­றாண்­டு­கால போராட்­டங்­களின் விளை­வாக வந்­ததே பிரிட்டிஷ் அர­சி­ய­ல­மைப்பு ஆகும். அதற்கு அத்­த­கைய ஒரு வர­லாறு இருக்­கி­றது. விடு­த­லையின் வர­லாறு   என்­பது அர­சாங்க அதி­கா­ரத்தை அதி­க­ரிப்­பதன் வர­லாறு அல்ல. மாறாக அர­சாங்க அதி­கா­ரத்தை மட்­டு­ப்ப­டுத்­து­வதன் வர­லாறே ஆகும்.

ஒரு சர்­வா­தி­கா­ரியின் சுவர்க்கம் என்­பது எவ்­வி­த­மான எதிர்ப்­பு­மின்றி முற்­று­மு­ழு­தாக அரச அதி­கா­ரங்­களை அவர் தன்­வசம் வைத்­தி­ருப்­ப­தே­யாகும். தேசப்­பற்­றுள்ள ஒரு பிரஜை என்­ப­தற்கு அவர் கொடுக்­கின்ற வரை­வி­லக்­கணம் நாட்­டுக்கு விசு­வா­ச­மாக இருப்­பதல்ல தனக்கு விசு­வா­ச­மாக இருப்­ப­தே­யாகும்.

வெவ்­வேறு அர­சி­ய­ல­மைப்­புகள் அரச அதி­கா­ரங்­களை வெவ்­வேறு வழி­களில் வேறாக்கிப் பிரித்­தி­ருக்­கின்­றன. பெரும்­பா­லான அர­சி­ய­ல­மைப்­புகள் அதி­கா­ரங்­களை வேறாக்கும் அசல் பிரெஞ்சு கோட்­பாட்டின் பிர­காரம் அர­சாங்­கத்தை மூன்று பிர­தான கிளை­க­ளாக்கி அரச அதி­கா­ரங்­களை செங்­குத்­தாக பிரிக்­கின்­றன. நிறை­வேற்று அதி­கா­ர­பீடம், சட்­ட­வாக்­க­சபை (பாரா­ளு­மன்றம்) மற்றும் நீதித்­துறை ஆகி­யவை அந்த இரண்டு கிளை­க­ளு­மாகும். உப தேசிய அல­கு­க­ளுக்கு குறிப்­பிட்ட சில அதி­கா­ரங்­களை ஒதுக்­கீடு செய்­வதன் மூலம் அதி­காரப் பர­வ­லாக்கல் அரச அதி­கா­ரத்தைக்  கிடை­நி­லை­யாக பிரிக்­கி­றது. சகல அதி­கா­ரங்­க­ளையும் ஒரு தனி­ந­ப­ரிடம் குவிப்­பதே சர்­வா­தி­காரம் என்று அழைக்­கப்­ப­டு­கி­றது.

1978 ஆம் ஆண்டில் கொண்டு வரப்­பட்ட இரண்­டா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பே சகல வல்­ல­மையும் கொண்ட நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பத­வியை உரு­வாக்கியது. அந்த அர­சி­ய­ல­மைப்பு அறி­மு­க­ப்ப­டுத்­தப்­பட்ட பின்னர் நடை­பெற்ற ஒவ்­வொரு தேர்தலிலும் பெரும்­பா­லான அர­சியல் கட்­சி­களின் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிப்­பது பற்­றியே வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டது. காலப்­போக்கில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யி­னதும் மத்­திய அர­சாங்­கத்­தி­னதும் அதி­கா­ரங்கள் படிப்­ப­டி­யாக குறைக்­கப்­பட்­டன. 13ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யொன்­றையும் சுயா­தீ­ன­மான பல ஆணைக்­கு­ழுக்­க­ளையும் உரு­வாக்­கி­யதன் மூலம் அரச சேவை­களில் குறிப்­பிட்ட சில முக்­கி­ய­மான பதவி நிலை­க­ளுக்கு அதி­கா­ரி­களை நிய­மிப்­பதில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தியின் பிடியை தளர்த்­தி­யது.

18 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் இந்த போக்கை தலை­கீ­ழாக்கி 1978 அர­சி­ய­ல­மைப்பின் கீழிருந்த அதி­கா­ரங்­க­ளையும் விட கூடு­த­லாக நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தியை மேலும் பலம் பொருந்­தி­ய­வ­ராக்­கி­யது. ஜனா­தி­ப­திக்கு இருந்த பத­விக்­கால மட்­டுப்­பா­டு­க­ளையும் அந்தத் திருத்தம் இல்லா­தொ­ழித்­தது. அத்­துடன் அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு பதி­லாக பாரா­ளு­மன்ற பேர­வை­யொன்­றையும் கொண்டு வந்­தது.

19 ஆவது திருத்­தத்தின் முக்­கிய அம்­சங்கள்

18 ஆவது திருத்­தத்தின் மூல­மாக ஜன­நா­யகம் பெரு­ம­ள­வுக்கு பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நேரத்தில் தான் அர­சி­ய­ல­மைப்­புக்­கான 19 ஆவது திருத்தம் நிறை­வேற்­றப்­பட்டது. அந்தத் திருத்தம் அரசை உண்­மையில் நிலை­யு­று­தி­யற்­ற­தாக்­கு­கின்­றதா என்­பதை அறிந்து கொள்­வ­தற்கு அதை மிகவும் அவ­தா­ன­மாக மதிப்­பீடு செய்ய வேண்டும்.

ஜனா­தி­ப­தியின் பத­விக்­கால மட்­டுப்­பா­டு­களை மீண்டும் கொண்டு வந்­தது 19 ஆவது திருத்­தத்தின் மிக முக்­கி­ய­மான அம்­ச­மாகும். அர­சியல் அதி­காரம் என்­பது பெரு­ம­ள­வுக்கு போதை போன்­றது. அத்­த­கைய அதி­கா­ரத்தை ஒரு தடவை அனு­ப­வித்த பெரும்­பா­லா­ன­வர்கள் அதன் அதி­கா­ரங்­க­ளையும் வரப்­பி­ர­சா­தங்­க­ளையும் கைய­ளிக்க விரும்­பு­வ­தில்லை. ஒரு சர்­வா­தி­கா­ரியின் பேராசை அவ­ரது வாழ்நாள் பூரா­கவும் நிரந்­த­ர­மாக அர­சி­ய­ல­தி­கா­ரத்தை தம்­முடன் வைத்­தி­ருப்­ப­துடன் மாத்­திரம் நின்­று­வி­டாமல் தனது வழித்­தோன்­றல்­க­ளுக்குக் கூட விரி­வு­ப­டுத்­து­வ­தாக அமை­யலாம். இயல்­பான இந்த மனித குறை­பாட்டை விளங்கிக் கொண்­டதன் அடிப்­ப­டையில் தான் அரச தலை­வர்­க­ளுக்­கான பத­விக்­கால மட்­டுப்­பா­டு­களை பெரும்­பா­லான நாடு­களின் அர­சி­ய­ல­மைப்­புகள் கொண்­டி­ருக்­கின்­றன. இது முற்­றிலும் சர்­வா­தி­காரப் போக்­குகள்  தொடர்­வ­தற்கு எதி­ரான ஒரு பாது­காப்பு ஏற்­பாடாகும்.

1978 அர­சி­ய­ல­மைப்பு தொடக்­கத்தில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்கு கூடு­தல்­பட்சம் இரு 6 வருட கால பதவி காலங்­களை குறித்­து­ரைத்­தது. நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பத­வியின் தீமை­களை பற்றி உரத்துப் பேசி அந்தப் பத­வியை ஒழிக்கப் போவ­தாக சூளு­ரைத்த ஒரு­வ­ரி­னா­லேயே 18 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் கொண்டு வரப்­பட்­டது. அந்த திருத்தம் ஜனா­தி­ப­தியின் பத­விக்­கால மட்டுப்­பா­டு­களை நீக்­கி­ய­துடன் ஜனா­தி­ப­தி­யாக இருந்­தவர் மீண்டும் பத­வி­யி­லி­ருப்­ப­தற்­காக எத்­தனை தட­வை­களும் தேர்தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு வகை செய்­வ­தாக அமைந்­தது.

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி அவரின் பதவி காலத்தில் சட்ட நட­வ­டிக்­கை­களில் இருந்து முற்றுமுழு­தான விடு­பாட்டு உரி­மையை அனு­ப­விக்­கிறார். அத்­த­கைய ஒரு நபர் வாழ்நாள் பூராகவும் பத­வியில் இருப்­பா­ரே­யானால், அவரின் நட­வ­டிக்­கை­க­ளினால் பாதிக்­கப்­படும் ஒருவர் சட்­டத்தின் முன்­பாக தனக்கு பரி­கா­ரத்தை தேடிக்­கொள்ள முடி­யாமல் போகும். 

19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்கு பத­விக்­கால மட்­டுப்­பா­டு­களை மீண்டும் கொண்டு வந்­தது. அத்­துடன் ஜனா­தி­ப­தியின் பதவி காலத்தை 5 வரு­டங்­க­ளா­கவும் குறைத்­தது. இரட்­டைப்­ பி­ர­ஜா­வு­ரி­மையை கொண்­டி­ருக்கக்கூடிய எவரும் இலங்­கையில் தேர்தல்­களில் போட்­டி­யிட முடி­யாது என்ற ஏற்பாடும் அந்த அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. 

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி தனது விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு இணங்க பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்கு கொண்­டிருந்த முற்­று­மு­ழு­தான தற்­து­ணிவு அதி­கா­ரத்­தையும் 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் நீக்­கி­யது. பாரா­ளு­மன்றம் 5 வருட பகுதி காலத்­துக்கு மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­ப­டு­கின்றது. தனது மனம் போன போக்கில் பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்கு ஜனா­தி­ப­திக்கு உரி­மையை கொடுப்­பது மக்­களின் விருப்­புக்கு ஒரு சவா­லாக அமை­கி­றது.

தற்­து­ணிவு அதி­கா­ரங்கள் எனப்­ப­டு­பவை முற்­றிலும் நியா­ய­பூர்­வ­மான அடிப்­ப­டையில் மாத்­தி­ரமே பயன்­ப­டுத்த வேண்டும். சகல வல்­லமை பொருந்­திய ஜனா­தி­ப­திக்கு தனது அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்­வதில் இருக்கக் கூடிய நாட்­டத்தை 2001 பாரா­ளு­மன்ற கலைப்பு பிர­கா­ச­மாக வெளிப்­படுத்தி­யது.

எந்தவித­மான தகு­தி­யான கார­ணமும் இன்றி அன்­றைய ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தை அது  தெரிவு செய்­யப்­பட்ட ஒரு வருடத்­துக்­குள்­ளேயே கலைத்தார். 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் கொண்டு வரப்­பட்ட பின்­னரும் கூட 2018 ஆம் ஆண்டில் அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணான முறையில் பாரா­ளு­மன்­றத்தை கலைக்க ஜனா­தி­பதி முயற்­சித்தார். தனது பத­விக்­கா­லத்தின் தொடக்­கத்தில் எந்த அர­சி­ய­ல­மைப்பை போற்றி பேணப்­போ­வ­தாக கூறி­னாரோ அந்த அர­சி­ய­ல­மைப்பை உச்­ச­பட்­ச­மாக அவ­ம­திக்கும் செயலை அவரே செய்தார்.

எவ்­வா­றெ­னினும் பாரா­ளு­மன்ற கூட்டத்­தொ­டரை ஒத்தி வைப்­ப­தற்­கான உரி­மையை இன்னும் ஜனா­தி­பதி தன்­வசம் கொண்­டி­ருக்­கின்றார். நீண்ட கூட்­டத்­தொடர் பணி­க­ளுக்குப் பிறகு தற்­கா­லிக ஓய்வை கொடுப்­ப­தற்­கான ஏற்­பாடே கூட்­டத்­தொடர் ஒத்திவைப்­பாகும்.

இந்த அதி­கா­ரமும் கூட கடந்த காலத்தில் ஜனா­தி­ப­தி­யினால் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்டிருக்­கின்­றது. பிர­தம நீதி­ய­ர­ச­ருக்கு எதி­ரான பதவி நீக்கப் பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வரப்­ப­டு­வதற்கு மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சி­யொன்றை சீர்­கு­லைப்­ப­தற்­காக பாரா­ளு­மன்ற கூட்டத் தொடர் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. ஆளுங்­கட்­சியை சேர்ந்த உறுப்­பி­னர்­களை எதி­ர­ணிக்கு கட்சி மாறச் செய்து அர­சாங்­கத்தை மாற்­று­வ­தற்­கான நோக்­கத்­துடன் சட்ட பூர்­வ­மற்ற முறையில் புதிய பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­ட­வ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்டு வரப்­ப­டு­வதை தடுப்­ப­தற்­கா­கவும் கால அவ­காசம் பெறு­வ­தற்­காக 2018 இல் பாரா­ளு­மன்ற கூட்டத்­தொடர் ஒத்தி வைக்­கப்­பட்­டது.

எனவே, பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொடர் ஒத்­தி­வைப்பு சபையில் ஒரு பிரே­ரணை கொண்டு வரப்­ப­டு­வதன் மூல­மாக அல்­லது சபா­நா­ய­கரின் ஆலோ­ச­னையில் செய்­யப்­பட வேண்­டுமா இல்­லையா என்­பதை எதிர்­கா­லத்தில் அர­சி­ய­ல­மைப்பு சீர்த்­தி­ருத்­தங்­களை செய்­ய­வி­ருப்­ப­வர்கள் பரி­சீ­ல­னைக்கு எடுப்பது பொருத்­த­மாக இருக்கும்.

ஆரம்­பத்தில் 17 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­தினால் நிறு­வப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யையும் 19 ஆவது திருத்தம் மீண்டும் கொண்டு வந்­தது. சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கும் முக்­கி­ய­மான பத­வி­க­ளுக்கும் நிய­ம­னங்­களை செய்­வது தொடர்பில் ஜனா­தி­ப­திக்கு ஆலோ­சனை வழங்­கு­வதே அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் வகி­பா­க­மாகும். அது ஆரம்­பத்தில் ஒரு குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் பெரும்­பான்­மை­யான சிவில் உறுப்­பி­னர்­க­ளையும் கொண்­டி­ருந்­தது. 

 இந்த நிய­ம­னங்­களை செய்­வதில் ஜனா­தி­ப­திக்கு இருந்த அதி­கார பிடியை 18 ஆவது அர­சியல் திருத்தம் மீண்டும் கொண்டு வந்­தது. அது பாரா­ளு­மன்ற பேர­வை­யொன்றை உரு­வாக்­கி­யது. பிரத்­தி­யே­க­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை கொண்­டி­ருக்கும் ஒரு பாரா­ளு­மன்ற கமிட்­டிக்கும் பாரா­ளு­மன்ற பேர­வைக்கும் இடையில் எவ்­வி­த­மான வித்­தி­யா­சமும் இருக்­க­வில்லை. பாரா­ளு­மன்ற பேரவை ஒரு வார காலத்­துக்குள் அதன் அவ­தா­னங்­களை ஜனா­தி­ப­திக்கு தெரியப்­ப­டுத்த வேண்டும். அத்­த­கைய அவ­தா­னங்கள் ஜனா­தி­ப­திக்கு விருப்­ப­மில்­லா­தவை என்றால் அவர் அவற்றை அலட்­சி­யப்­ப­டுத்த முடியும்.

19 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் அர­சி­ய­ல­­மைப்பு பேர­வையை மீண்டும் கொண்டு வந்­தது. ஆனால், இத்­த­டவை அதன் உறுப்­பி­னர்­களின் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவே இருந்­தனர். ஆனால் இந்தப் பேர­வை­யினால் சிபா­ரிசு செய்­யப்­ப­டு­கின்ற நபர்­களை ஜனா­தி­ப­தியின் சம்­மதம் இல்­லா­மலே கூட நிய­மிக்க முடியும். தேவை­யானால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத பட்­சத்தில் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கு உறுப்­பி­னர்­களை நிய­மிக்­கவும் ஜனா­தி­ப­தி­யினால் முடி­யாது. 

அர­சி­ய­ல­மைப்பு  பேர­வையை  இல்­லாமல்  செய்தால்  அது மேல்  நிலை  நீதி­மன்­றங்­களின்  நீதி­ப­திகள் உட்­பட  அர­சாங்­கத்தின்  முக்­கி­ய­மான  சகல  பத­வி­க­ளையும்  நிரப்­பு­வ­தற்கு நிறை­வேற்று  அதி­கார  ஜனா­தி­ப­திக்கு  முற்று  முழு­தா­னதும்  கேள்­விக்­கி­ட­மின்­றி­ய­து­மான  அதி­கா­ரத்தை மீண்டும்  கைய­ளிப்­ப­தாக  அமையும்.

1978  அர­சி­ய­ல­மைப்பு  கருத்து வெளிப்­பாட்டு  சுதந்­திரம், பேச்­சு­ரிமை, வெளியீட்டு  உரிமை  ஆகி­ய­வற்றை  ஒரு  அடிப்­படை  உரி­மை­யா­கக் ­கொண்­டி­ருந்­தது. தகவல்  அறி­வ­தற்­கான  ஒரு உரி­மையை  ஒரு அர­சி­ய­ல­மைப்பு  உரி­மை­யாக  19 ஆவது திருத்தம்  அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.  இர­க­சி­யத்­தினால் சூழப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய   அர­சாங்க  தக­வ­ல்கள் சந்­தே­கங்­க­ளுக்கு  வழி­வ­குத்து  போலிச்­செய்­தி­க­ளுக்கும்  வீண்­ப­தற்ற   அதி­க­ரிப்­புக்­கு­மான விளை­நி­ல­மாக  மாறு­கின்­றது. அர­சாங்க  தக­வல்­களை அறி­வ­தற்­கான  உரி­மையை பிர­ஜை­க­ளுக்கு கொடுப்­பது  அர­சாங்­கத்தை  ஒளிவு­ம­றை­வற்றதாக  மாற்­று­கி­றது.  இந்த உரிமை நீக்­கப்­ப­டு­மானால்  பிர­ஜை­களின்  ஜன­நா­யக  உரி­மை­க­ளுக்கு  பார­தூ­ர­மான  தாக்­க­மாக  அமையும்.

19  ஆவது அர­சி­ய­ல­மைப்பு  திருத்­தத்தின்  கீழ் ஜனா­தி­பதி  தொடர்ந்தும் அமைச்­ச­ர­வைக்கு தலை­மை­தாங்­கு­ப­வ­ராக  இருக்­கின்றார்.  ஆனால், அமைச்­ச­ரவை  உறுப்­பி­னர்­க­ளி­னதும் அமைச்­ச­ரவை  அந்­தஸ்­தற்ற  அமைச்­சர்­க­ளி­னதும்   எண்­ணிக்­கையை,  தீர்­மா­னிப்­ப­திலும்  அவர்­க­ளுக்­கான  பொறுப்­பு­களை  ஒப்­ப­டைப்­ப­திலும்  பிர­த­ம­ருடன் கலந்­தா­லோ­சனை செய்­வ­தற்கு  ஜனா­தி­பதி  சட்­ட­ரீ­தி­யாக  கட்­டுப்­பட்­டவர்  ஆகிறார். மேலும் பிர­த­ம­ரையோ அல்­லது எந்­த­வொரு அமைச்­ச­ரையோ  தனது விருப்பு வெறுப்பின்  பெயரில்  பதவி  நீக்­கு­வ­தற்கு  ஜனா­தி­ப­திக்கு இருந்த உரிமை அகற்­றப்­பட்­டது. 19 ஆவது திருத்­தத்தின் கீழ் எந்­த­வொரு  அமைச்சு பொறுப்­பையும்  வைத்­தி­ருப்­ப­தற்கு  ஜனா­தி­பதி  உரித்­து­டை­யவர்  அல்ல.  ஆனால்,  அவர்  தொடர்ந்தும் கணி­ச­மான  அளவு, நிறை­வேற்று அதி­கா­ரங்­களை  தம்­வசம்  வைத்­தி­ருக்­கிறார். குறிப்­பாக  அமைச்­சு­களின் செய­லா­ளர்கள், மாகா­ணங்­களின்  ஆளு­நர்கள்  மற்றும் தூது­வர்­களை  நிய­மிப்­ப­தற்­கான உரி­மையை கொண்­டி­ருக்­கின்றார்.

 உறு­தி­யான  ஒரு பாரா­ளு­மன்றம் 

சட்­ட­வாக்கம், நிறை­வேற்­ற­தி­கார  பீடத்தை மேற்­பார்வை செய்தல், அர­சாங்க நிதியை கட்­டுப்­ப­டுத்தல் ஆகிய பொறுப்­புகள் பாரா­ளு­மன்றத்துக்கு கொடுக்­கப்­பட்­டி­ருக்கும் அதே­வேளை நிறை­வேற்று அதி­காரப் பத­வியில் இருப்­ப­வர்கள் சட்­டங்­களை நிர்­வ­கிப்­ப­தற்கும் அர­சாங்­கத்தை நடத்­து­வ­தற்­கு­மான அதி­கா­ரங்­களை கொண்­டி­ருக்­கின்றார்.

சட்­டங்கள் உகந்த முறையில் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­றதா என்­பதை தீர்­மா­னிப்­பது நீதித்­து­றையின் பணி­யாகும். எனவே, அதி­கார வேறாக்கம் என்­பது, அதி­கா­ரங்கள் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டா­தி­ருப்­பதை உறுதி செய்­வ­தற்கு தடுப்­பு­க­ளையும் சமப்­ப­டுத்­தல்க­ளையும் கொண்ட ஒரு முறை­யாகும்.

தேர்தல்­களில் விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ முறையும் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பத­வி­யுடன் பிணைக்­கப்­பட்­ட­தாக இருக்­கி­றது. அதிகப் பெரும்­பான்மை ஆச­னங்­களைக் கொண்ட அர­சாங்­கங்கள் அமைக்­கப்­ப­டு­வதைத் தடுப்­ப­தற்கு உத­வு­கின்ற விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ முறை ஜனா­தி­ப­தி­யொ­ரு­வ­ரினால் கட்­டுப்­பா­டற்ற முறையில் அதி­கா­ரங்கள் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­வ­தற்கு எதி­ரான ஒரு தடுப்­பா­கவும் இருக்­கி­றது. பாரா­ளு­மன்­றத்தில் அமோ­க­மான பெரும்­பான்மை பலத்தை கொண்ட நிய­மிக்­கவும் ஜனா­தி­ப­தியால் முடி­யாது.

அரசின்  ஆத­ர­வைக்­கொண்ட  நிறை­வேற்று  அதி­கா­ரங்­கொண்ட  ஜனா­தி­ப­தி­யொ­ருவர்  இல­கு­வாக  அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களை  செய்வார்.  உறு­தி­யான  ஒரு  அர­சாங்கம்  என்­பது சர்­வா­தி­கா­ரி­யொ­ரு­வரின்  கன­வாக  இருக்­கலாம்.  ஆனால், அது பிர­ஜை­களின் கோரக்­க­ன­வாக  இருப்­ப­தற்­கான  சகல சாத்­தி­யங்­களும்  இருக்­கின்­றன. 

 பாரா­ளு­மன்­றமும்  ஏனைய  பிர­தி­நி­தித்­துவ  சபை­களும் நிறை­வேற்று  அதி­கார பீடத்­தினால்  அதி­கா­ரங்கள் துஷ்­பி­ர­யோ­கங்கள்  செய்­யப்­ப­டு­வ­தற்கு  எதி­ரான  ஒரு பாது­காப்பு  ஏற்­பா­டாக  அமை­கின்­றன. பாரா­ளு­மன்றம் என்­பது வெறு­மனே எண்­ணிக்­கை­களை  நிரூ­பிக்­கின்ற  ஒரு மன்றம் அல்ல.  மக்­களின் எதிர்­பார்ப்­பு­களும் அச்­சங்­களும் அர­சாங்­கத்தின் கவ­னத்­துக்கு  கொண்டு வரப்­ப­டு­கின்ற  இடமே பாரா­ளு­மன்­ற­மாகும். எனவே, நிறை­வேற்­றதி­கார  ஜனா­தி­ப­தி­யினால்   அவ­ருக்கு விருப்­ப­மான  முறையில் பயன்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டி­ய­தாக அமை­யக்­கூ­டிய  பாரா­ளு­மன்­ற­மொன்று  அதுவும் அமோக  பெரும்­பான்­மை­யுடன் இருப்­ப­தாக  இருந்தால் அது பலம்  பொருந்­திய  சட்­ட­வாக்­க­ச­பையே  அல்ல.  

2018 அக்­டோ­பரில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஒருவர் அர­சி­ய­ல­மைப்பை மீறிய வெறுப்பைத் தந்த அனு­ப­வ­மொன்று எமக்குக் கிடைத்­தது. முத­லா­வ­தாக அவர் அதி­கார சம­நி­லையை மாற்­று­வ­தற்­காக அர­சாங்க உறுப்­பி­னர்கள் எதி­ர­ணிக்குத் தாவு­வதை ஊக்­கப்­ப­டுத்­து­வ­தற்கு கால அவ­கா­சத்தைப் பெறும் அப்­பட்­ட­மான சட்டவிரோத நோக்­கத்­துக்­காக பாரா­ளு­மன்றக் கூட்­டத்­தொ­டரை ஒத்தி வைப்­ப­தற்கு தனது தற்­து­ணிவு அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­தினார். சட்டவிரோ­த­மாக நிய­மிக்­கப்­பட்ட பிர­த­ம­ருக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்டு வரப்­ப­டு­வதைத் தடுக்கும் ஒரு முயற்­சி­யா­கவும் அது அமைந்­தது. பாரா­ளு­மன்­றத்தின் உரி­மை­களை உறு­தி­யாகக் கடைப்­பி­டித்த சபா­நா­ய­கரின் நட­வ­டிக்­கை­க­ளினால் ஜனா­தி­ப­தியின் முயற்­சிகள் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. 

அந்த முயற்­சி­களில் ஏற்­பட்ட தோல்­வி­க­ளை­ய­டுத்து ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்­கான உத்­த­ரவைப் பிறப்­பித்­ததன் மூலம் நேர­டி­யா­கவே அர­சி­ய­ல­மைப்பை மீறினார். ஆனால், அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரங்­களில் கடை­மு­டி­வான நியா­யா­திக்­கத்தைக் கொண்ட உச்ச நீதி­மன்றம் பாரா­ளு­மன்றக் கலைப்பு சட்ட ரீதி­யாக செல்­லு­ப­டி­யற்­றது என்று தீர்ப்­ப­ளித்­தது. 

எனவே, அர­சி­ய­ல­மைப்­பையும் 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­தையும் எடுத்த எடுப்பில் கண்டனம் செய்வோர் அரசியலமைப்பில் ஏதாவது பிழையிருக்கிறதா அல்லது அதை மீறியவர்களில் பிழையிருக்கிறதா என்பதை நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

எந்தவொரு அரசியலமைப்புமே கச்சிதமானதாக இருக்க முடியாது. 19 ஆவது திருத்தத்துடன் கூடிய இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு குறிப்பிட்ட சில குறைபாடுகளைக் கொண்டிருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேவேளை, அந்தக் குறைபாடுகளை அடையாளங்கண்டு திருத்திக்கொள்ள முடியும். இதற்கு நாட்டுப்பிரஜைகள் தங்களது குடியியல் உரிமைகளைப் பாதுகாப்பதில் இடையறாத விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஜனநாயகத்தின் வெற்றியை அரசியலமைப்பு உறுதி செய்துவிட முடியாது. அரசியல் மேதகைமையின் தலைசிறந்த படைப்பென்று வர்ணிக்கப்படுகின்ற ஜேர்மனியின் வீய்மர் அரசியலமைப்பினால் (மீட்பர் என்ற போர்வையில் வந்து நாட்டை அழிவுக்கு இட்டுச்சென்ற) அடொல்ப் ஹிட்லரின் வடிவில் கொடூரமான அரக்கனொருவன் தோன்றுவதை எவ்வாறு தடுக்க முடியாமல் போனது என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது மயிர்க்கூச்செறிகிறது. 

தங்களுக்கு முன்னாலுள்ள தெரிவின் பாரதூரத்தன்மை பற்றியும் அதனால் நாட்டுக்கு ஏற்படக்கூடிய இழப்புகள் பற்றியும் அக்கறையுடன் சிந்தித்துப் பார்க்க வேண்டியது பிரஜைகளின் கடமையாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியைப் பலப்படுத்துவது என்பது நாணயத்தின் ஒரு பக்கம். அதன் மறுபக்கம் அடிமைத்தனமான பாராளுமன்றமும் எந்தப் பயனுமில்லாத நீதித்துறையுமாகவே இருக்கும். 

செல்வமும் வாய்ப்புகளும் ஒப்புரவான முறையில் பகிர்ந்தளிக்கப்படுகின்ற முழுநிறைவான பொருளாதாரமொன்றை அடிப்படையாகக் கொண்டதே தேசமொன்றின் உறுதிப்பாடாகும். அங்கு மக்கள் கண்ணியம் மிக்கவர்களாகவும் சட்டத்தின் ஆட்சி மேன்மையானதாகவும் இருக்க வேண்டும். 

எனவே, முன்னாள் ஜனாதிபதி இலங்கையின் அரசியலமைப்பு ரீதியான அரசாங்கத்தை நிர்மூலம் செய்வதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு மேற்கொண்ட செயல்கள் தோற்றுவித்த 2018 அக்டோபர் அநாவசிய நெருக்கடியின் போது 2 கோடிக்கும் அதிகமான இலங்கையர்களின் குடியுரிமைகள் நொய்தான நூலொன்றில் தொங்கிக் கொண்டிருந்தது என்றதை 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்ற நேரத்தில் நினைவுகூர்ந்துப் பார்க்க வேண்டியது அவசியமானதாகும்.

பிரியாணி விஜேசேகர   
ஓய்வுபெற்ற பாராளுமன்ற செயலாளர் நாயகமும் ஆஸ்திரியாவுக்கான முன்னாள் தூதுவரும்