திருகோணமலையில் இன்று தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோயிலடி பிரதேசத்தில் அமைந்துள்ள புத்தர் சிலையொன்று அதிகாலை 5.30 இனந்தெரியாதவர்களினால் உடைக்கப்பட்டதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கோவிலடி சந்தியில் இருந்த சிறு புத்தர் சிலையே உடைக்கப்பட்டது என தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தர் சிலை உடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த தம்பலகாமம் பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பிரதேசத்தில் நடமாடிய நபர் ஒருவரை விசாரித்தனர் 

அதன் அடிப்படையில் அந்நபரை பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்ததாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் திருகோணமலை பொது வைத்தியசாலை மனநல பிரிவில் மாதாமாதம் சிகிச்சை பெறுபவர் எனவும் அதற்கான பொது வைத்தியசாலை மனநல பிரிவில் குறித்த நபருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பதிவுக்கான அட்டையின் அடிப்படையில் தாம் தெரிந்து கொண்டதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் வயது 42, எனவும் அவர் சமூகமயப்படுத்தப்பட்ட முன்னால் போராளி என்பதும் தம்பலகாமம் பொற்கேணிப் பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த தம்பலகாமம் விகாரையின் விகாரியபதி மற்றும் குழுவினரால் புதிய புத்தர் சிலையொன்று உடைக்கப்பட்ட புத்தர் சிலை இருந்த இடத்தில் வைக்கப்பட்டுள்தாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான மனச்சிதைவடைந்த முன்னாள் போராளியை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.