தனியார் வைத்தியசாலைகளில் வெளி நோயாளர் பிரிவினரின் வைத்தியக் கட்டணங்களுக்கு வற்வரி சலுகைகள் வழங்கும் வர்த்தமானியமானது இன்று வெளியிடப்படுமென பிரமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு அதிகபட்ச சலுகைகளை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையெனவும் பிரதமர் தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெள்ளம்பிட்டி பிரதேச மக்களின் நலன் தொடர்பில் விசாரிப்பதற்காக நேற்று மாலை அங்கு விஜயம் செய்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.