வவுனியா பகுதியில் மாணவியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார். 

 வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் சென்ற 14 வயதுடைய பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியின் சாரதி நேற்றிரவு (09.03.2020) பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இருந்து கிடாச்சூரி நோக்கி செல்வதற்கு இரவு நேரத்தின் பேருந்து இன்மையினால் குறித்த மாணவி தாண்டிக்குளம் பகுதியில் இருந்து கிடாச்சூரியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு செல்வதற்காக முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளார்.

மாணவி தனிமையிலிருந்ததால்,  முச்சக்கர வண்டியின் சாரதி பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குறித்த மாணவியினை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டதினையடுத்து, சாரதியினை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.