(எம்.மனோசித்ரா)

மதவாச்சி, துலாவெல்லிய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண்னொருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

பூ பறிப்பதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்றிருந்த பெண்னொருவரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளார். 

55 வயதான உயிரிழந்த பெண் மெதகம, பரசங்கஸ்வௌ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.