கொரோனா வைரஸ் பர­வு­வதைத் தடுக்க வங்கி நாண­யத்­தாள்­களை பயன்­ப­டுத்­து­வதை மக்கள் நிறுத்த வேண்டும் என உலக சுகா­தார ஸ்தாபனம் கோரி­யுள்­ளது.

 கொவிட் -19 கொரோனா வைர­ஸா­னது வங்கி நாண­யத்­தாள்­களில் பல நாட்­க­ளுக்கு உயிர் வாழும் வல்­ல­மையைக் கொண்­டுள்­ளதால்  மக்கள் நாண­யத்­தாள்­களைப் பயன்­ப­டுத்­திய பின்னர் தமது கைகளை நன்­றாக கழுவ வேண்டும் என  முன்னர் எச்­ச­ரித்­தி­ருந்த உலக சுகா­தார ஸ்தாபனம், தற்­போது நாண­யத்­தாள்­களை பயன்­ப­டுத்­து­வதை  கைவிட்டு  இலத்­தி­ர­னியல் பணப் பரி­மாற்ற முறை­களை  பயன்­ப­டுத்த சிபா­ரிசு செய்­துள்­ளது. 

கடந்த மாதம் சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றுப் பர­வு­வதைத் தடுக்க வங்கி நாண­யத்­தாள்­களை தொற்று நீக்­கவும் அவற்றை  பெற்று  பயன்­பாட்­டி­லி­ருந்து ஒதுக்கி வைக்கவும் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.