இலங்கையின் சுபீட்சத்துக்கான முன்னேற்றப் பாதையில் இந்தியா பூரண ஒத்துழைப்புக்களை  தொடர்ந்தும் வழங்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

வடக்கிற்கான விஜயத்தை நினைவுகூர்ந்த இந்தியப் பிரதமர் மோடி யாழ்.மக்கள் தன்னை அன்புடன் வரவேற்றமை புத்துணர்வு அளிப்பதாகவும், இலங்கையில் வாழும் மூவின மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதையே இந்தியா விரும்புகிறது என குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். அல்பிரட் துரையப்பா மைதானத்தை டிஜிட்டில் காணொளி காட்சியூடாக டில்லியில் இருந்தவாறே இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதன்போது வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியுறவுச்செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் உடன் இருந்தனர். அதன் பின்னர் இந்தியப்பிரதமர் மோடி உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.