இளவரசர் ஹரியின் மனைவியை கட்டியணைத்தமைக்காக லண்டனின் மாணவன் ஒருவன் ஹரியிடம் மன்னிப்பு கோரியுள்ளான்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு லண்டனின் டங்கஹாம் பகுதியில் உள்ள ரொபேர்ட் கிளார்க் பாடசாலைக்கு மேகன்  சென்றிருந்தவேளை அகெர் ஓகயோ என்ற 16 வயது மாணவன் ஹரியின் மனைவியை அழகானவர் என தெரிவித்து கட்டியணைத்துள்ளான்.

மேகன் சர்வதேச மகளிர் தினம் குறித்து கருத்துபரிமாறுவதற்காக  துணிச்சலான மாணவன் ஒருவனை அழைத்தவேளை அந்த மாணவன் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியுள்ளான்.

மேகனின் கன்னத்தில் முத்தமிடுவது போல நெருங்கிச்சென்ற  அந்த மாணவன் தனது சக மாணவர்களை பார்த்து மேகன் உண்மையாகவே அழகானவராகயிருக்கின்றார் என குறிப்பிட்டுள்ளான்.

மேகன் இதனை கேட்டு சிரித்துள்ளார், மாணவர்களும் ஆராவாரித்துள்ளனர்.

பின்னர் ஹரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அந்த மாணவன் தனது நடவடிக்கை எல்லை மீறியதில்லை என கருதுவதாக தெரிவித்துள்ளான்.

உங்கள் மனைவியை நான் கட்டியணைத்ததை நீங்கள் பெரிது படுத்தியிருக்க மாட்டீர்கள் என நான் நினைக்கின்றேன் என ஹரிக்கான கடிதத்தில் மாணவன் குறிப்பிட்டுள்ளான்.

அவர் பாடசாலைக்கு வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தேன் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன் என அந்த மாணவன் குறிப்பிட்டுள்ளான்.

மேகனின் உரையை கேட்டதும் அவரின் முன்னிலையில் உரையாற்றியதும் மகிழ்ச்சிகரமான விடயம் என அந்த மாணவன் தெரிவித்துள்ளான்.