(ஆர்.யசி)

மத்திய வங்கி பிணைமுறிகளில் மிகப்பெரிய ஊழல் மோசடிகளை செய்தவர்கள் இன்று தலைமறைவாகி வாழ்கின்றனர். எவ்வாறு இருப்பினும் பொதுத் தேர்தலுக்கு  முன்னர் முக்கியமான சிலர் கைதாவார்கள் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். 

அத்துடன் கடந்த ஐந்தாண்டு காலத்தில் அரசாங்கம் மிகப்பெரிய குற்றச்செயல்களை முன்னெடுத்துள்ளது. இதில் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் என்பது மிகப்பெரிய குற்றச்செயலாகும். இந்த குற்றத்துடன் தொடர்புபட்ட எவரையும் எமது அரசாங்கம் விட்டுவைக்காது. இப்போது ஒரு சிலர் மீதான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலர்  தலைமறைவாகியுள்ளனர். இவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள். அதேபோல் முக்கிய  குற்றவாளிகள் சிலர் தேர்தலுக்கு முன்னர் கைதாவார்கள். 

நாட்டை விட்டு வெளியேறியுள்ள சிலர் மீதான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அர்ஜுன் மஹேந்திரன்  உள்ளிட்ட சிலர் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. எமது முயற்சிகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றதே தவிர எவரையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் எமக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.