(ஆர்.யசி)

ரணில் தரப்பையும் -சஜித் தரப்பையும் நாளை தனித்தனியாக சந்தித்து இறுதித் தீர்மானமொன்றிற்கு கொண்டுவரவும் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.  

ஐக்கிய தேசிய முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ரணில் அணியினர் மற்றும் சஜித் பிரேமதாச அணியினரை முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தொடர்ச்சியாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றார். 

இந்நிலையில் நேற்று  மற்றும் அதற்கு முந்தைய தினம் ஆகிய நாட்களில் சஜித் மற்றும் ரணில் தரப்பை தனித்தனியே சந்தித்து கரு ஜெயசூரிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார். 

இந்நிலையில் மீண்டும் நாளைய தினம் சஜித் தரப்பையும் -ரணில் தரப்பையும் தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இரண்டு தலைவர்களுக்கும் கரு ஜெசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.