இன, மத, மொழி, சாதி ரீதியில் தேர்தலில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதை தவிர்க்கவும் - கிளிநொச்சி  சர்வ மத தலைவர்கள் 

Published By: Digital Desk 4

09 Mar, 2020 | 03:52 PM
image

இன, மத, மொழி, சாதி ரீதியில் தேர்தல்காலங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதை தவிர்க்குமாறு கிளிநொச்சி மாவட்ட சர்வ மத தலைவர்கள் எடுத்துரைத்துள்ளனர். அதேவேளை மக்கள் சுயமாக சிந்தித்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கையும் விடுத்துள்ளனர். 

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

வாக்காளர்கள் தமது வாக்குரிமையை மத ரீதியாகவும் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும்  பார்க்காமல் அதனை ஜனநாயகத்தினுடைய  ஒரு அங்கமாக  பார்த்து சரியான தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட சர்வமத நல்லிணக்க குழுவினர் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர்

கிளிநொச்சி மாவட்ட சர்வமத நல்லிணக்க குழுவினர் இன்று (09-03-2020) கிளிநொச்சியில் அமைந்துள்ள சோலைவனம் விடுதியில் நடத்திய ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

பலம் வாய்ந்த ஒரு ஆயுதம்  வாக்குரிமை அதனை  மத ரீதியாகவும் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் நாங்கள் பார்க்காமல்  ஜனநாயகத்தின்  ஒரு அங்கமாக நாங்கள் பார்த்து சரியான தலைவர்களை மக்களுடைய உரிமைகளுக்காக கரிசனை உடையவர்களை தெரிவு செய்வதற்கு என்னுடைய வாக்குரிமையை பயன்படுத்த வேண்டுமெனவும் மத துவேஷங்கள் இனத்துவேசங்களி்கும், தங்களுக்கு நாங்கள் இடம் கொடுக்க கூடாது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதே வேளைவாக்களிக்காமல் ஒருவரும் இருக்கக்கூடாது கட்டாயமாக குறித்த நேரத்திற்கு நாங்கள் சென்று வாக்களிக்கும்படி வாக்காளர்களை அன்போடு கேட்டுக்கொள்கிண்றோம்

அரசியல் என்பது பொதுவானது எதற்கும் வாக்களிக்கலாம் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று யாரை நம்பக்கூடாது 

மாற்றுக்கருத்துக்கு இடமில்லை அந்த வகையில் ஆலயங்களில் ஒரு கட்சியில் சார்பான கருத்துக்களை கட்சி ரீதியாக ஆலயங்களில் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதை ஆலயங்களில் தவிர்க்கவும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆலயங்களின் முக்கிய நோக்கம் ஆன்மீகம் ஆகும். எல்லோர் மீதும் அன்பு செலுத்து ஆண்மீகள் கற்றுத்தரும் பாடமாகும். நாங்கள் அதனை அரசியலாக கொண்டு வரக்கூடாது. அதனை பின்பற்ற வேண்டும் என்பதை மனதார ஏற்றுக்கொண்டு நாடு முழுவதும் இடம்பெறுகின்ற தேர்தல் காலங்களில் நாடு முழுவதும் இந்து மதத் தலைவர்கள் மதத் தலைவர்கள் வந்து அரசியல்வாதிகளுக்கு நேரடியாக வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டு இருந்தார்கள்  அதை நாங்கள் எதிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மதங்களையும், இனங்களையும், சாதியம் உள்ளிட்டவற்றை இலக்குவைத்து கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைகளை மக்கள் நிராகரித்துள்ளனர். குறித்த செயற்பாடுகளை இனம் காண்டு கடந்த காலங்களில் செயற்பட்டது போன்று இம்முறையும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தள்ளனர். மதங்கள் அனைத்தம் அன்பையே போதிக்கின்றது. அதனை ஒருபோதும்  அரசியலாக பயன்படுத்த கூடாது. மக்கள் நிதானமாகுவும், அனைவரையும் நேசிக்கின்ற வகையிலும் செயற்பட வேண்டும்.

இலங்கையில் உள்ள பிரஜை எந்த மதத்தினையும், எந்த இனத்தவரையும் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்ய முடியும். யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்க முடியும். சுயமாக சிந்தித்து வாக்களிக்கும் உரிமை மக்களிற்கு உண்டு. அதனை குழப்பும் வகையிலும், மத, இன வாதங்களை ஏற்படுத்தம் வகையிலும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடாது தவிர்க்குமாறும் அவர்கள் பணித்துள்ளனர். 

நடைபெறவுள்ள தேர்தல் அமைதியாக இடம்பெறவும், அனைத்து பிரஜைகளும் வாக்களித்து தமது உரிமையை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர்கள், வாக்களிப்பு என்ற உரிமையை அனைவரும் பயன்படுத்த வே்ணடும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர். அனைவரும் ஒரே இனம், ஒரே மக்கள் என்ற சிந்தனை வளர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ஊடக சந்திப்பில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43