மன்னாரில் போயா தினமான இன்று திங்கட்கிழமை சட்டவிரோதமான  முறையில் வீடு ஒன்றில் பதுக்கி வைத்து விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மதுபானங்களை மன்னார் மது வரி திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

படைத்தரப்பினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் சின்னக்கடை பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்ற படையினர் சோதனை நடத்தினர்.

இதன் போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய வீட்டு வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மதுபானங்களை மீட்டனர்.

எனினும் குறித்த வீட்டின் உரிமையாளர் தப்பிச் சென்றுள்ளார்.சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் மதுவரி திணைக்கள அதிகாரிகள் மதுபானங்களை மீட்டுச் சென்றுள்ளதோடு,மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.