(ஆர்.விதுஷா)

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் உத்தியோகப் பூர்வ தேர்தல் பிரசார  தலைமை அலுவலகம் இன்று திங்கட்கிழமை சர்வமத  தலைவர்களின் ஆசியுடன் திறந்து வைக்கப்பட்டது. 

ஆதரவாளர்களின்  வெற்றிக்கோஷத்துடன்  சஜித்  பிரேமதாச     பத்தரமுல்லை  - எதுல்  கோட்டையில் தலைமை அலுவலகத்தை  காலை 9.34 சுபநேரத்தில் சஜித் பிரேமதாச  திறந்து வைத்தார்.

ஐக்கிய தேசிய  கட்சியின்  முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர்கள், மாகாண சபை  உறுப்பினர்கள், தொகுதி  அமைப்பாளர்கள்  மற்றும்  கட்சி ஆதரவாளர்கள் என  ஏராளமானோர்  நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தனர். 

ஐக்கிய மக்கள் சக்தியின்  பொது செயலாளர்  ரஞ்சித்  மத்தும  பண்டார , ராஜித  சேனாரத்ன, மங்கள  சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சந்திராணி பண்டார  ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர். 

இந்த  நிகழ்வில் தமிழ்  முற்போக்கு  கூட்டணியின் தலைவர்  மனோ கணேசன்,  ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸ் தலைவர்  ரவூப் ஹக்கீம்,  ஜாதிக ஹல உறுமய வின்  தலைவர்  பாட்டலி  சம்பிக்க  ரணவக்க  ,  இலங்கை  மக்கள்  காங்கிரசின்  தலைவர்  ரிஷாத்  பதியுதீன் உள்ளிட்டவர்கள்  கலந்து கொண்டதுடன்,   ஐக்கிய  தேசிய  கட்சின்  முக்கிய ஸ்தர்களான  கொழும்பு  மாநகரசபை  மேயர்  ரோசி சேனாநாயக்க  , எஸ்.எம்.மரிக்கார் ,  பீல்ட்  மார்ஷல்  சரத் பொன்சேகா  ,  அஜித்  பீ.பெரேரா, எரான் விக்கிரமரத்ன,ஜே.சி. அலவத்துவல, சுஜீவ  சேனசிங்க, லக்ஷ்மன்  கிரியெல்ல,   ஹிருணிகா  பிரேமச்சந்திர  , திஸ்ஸ  அத்தனாயக்க,  உள்ளிட்டவர்களும் ,  அதேவேளை விஜித் விஜெயமுனி  சொய்சா,  ஏ.எச்.எம்.பௌசி  ஆகியோரும்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.