தந்தையொருவர் தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

கொக்கரெல்ல வெவ்சிறிகம பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் நேற்று (08.03.2020) பிற்பகல் தனது இரண்டு பிள்ளைகளையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தப் பின்னர் அவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

06 வயதான ஆண் பிள்ளையும், 03 வயதான பெண் பிள்ளை ஒன்றுமே இவ்வாறு தந்தையால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பிள்ளைகளினது தாயார் கட்டுநாயக்க பகுதியில் வீடொன்றில் தொழில் புரிபவர் எனவும் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

மேலும், சம்பவம் தொடர்பில் கொக்கரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.