வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இலங்கை உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கட்டார் செல்வதற்கு அந் நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

கட்டார் ஏயர்வேஸ் ஏற்கனவே இத்தாலிக்கான தனது விமானங்களை சேவைகளை நிறுத்தியுள்ள நிலையில் தற்போது சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், இலங்கை, லெபனான், பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகியே நாடுகளைச் சேர்ந்தவர்களே கட்டாருக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டாரில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க கட்டார் எடுத்துள்ள முயற்சிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதேவேளை அத்தியாவசிய வெளிநாட்டுப் பயணங்களை தவிர ஏனைய அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறும் கட்டார் அந் நாட்டு பிரஜைகளிடம் வலியுறுத்தியுள்ளது.