பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ஒன்றின்போது 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பன்னிப்பிட்டிய பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் 60 இளைஞர்களும் 17 யுவதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைது நடவடிக்கையின் போது அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும்  போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பன்னிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.