யோக அப்பியாசம் என்பது ஒரு உடற்பயிற்சியல்ல. அது உடலுக்கும் உடம்பிற்கும் நலன்களை ஏற்படுத்தும் ஒரு பாரம்பரிய செயற்பாடாகும் என்று இந்திய உதவித் தூதுவர் ராதா வெங்கட்டராமன் தெரிவித்தார்.

 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கண்டி உதவி இந்தியத் தூதுவராலயமும் கண்டி பிரமக்குமாரிகள் ராஜயோக நிலையமும் இணைந்து நடத்திய யோகாசணம் தொடர்பான செயல் அமர்வு கண்டி போகம்பறை மைதானத்தில நேற்று இடம் பெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, உடல் உறுதி பெறுவதுடன் மனதுக்கும் ஒரு அமைதியும் ஏற்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை இது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு படைத்தது. சித்தர்களாலும் யோகிகளாலும் பாரம்பரியமாக கொண்டுவரப்பட்ட ஒரு உயர் கலை என்றும் குறிப்பிட்டார்.

(வத்துகாமம் நிருபர்)